எனதருமை தமிழ் உள்ளங்களே அன்று இரண்டாம் உலக யுத்ததில் அமேரிக்க பயன்படுத்திய அணுகுண்டு யப்பனியரை அந்த சமயத்தில் உருக்கி போட்டாலும் சில வருடங்களில் வெகுண்டு எழுந்தார்கள். இன்று வல்லரசுக்கே பாடம் சொல்கிறார்கள். இன்று நம் தமிழ் மக்கள் மீது உலகமே தடை செய்த ஹைட்டரஜன் குண்டுகளை இந்தியா பயன்படுத்தி இருக்கிறது. தமிழர்களை கொல்வது மட்டுமே இந்தியா அரசின் நோக்கம் என்பது புலனாகிவிட்டது. நம் தமிழர்கள் சாம்பலில் இருந்தும் எழுந்து போராடும் திறன் படைத்தவர்கள் என்பதை மறந்து ஹைட்டரஜன் குண்டுகளை போட்டு மிரட்டி பார்க்கிறது.
கண்களின் நீர் வற்றி விட்டது
உலக நாடுகள் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஒரு சிலருக்கும் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருக்கும் சாவுங்கடா என்று ஆனால் ஒட்டு மொத்த தமிழரும் இரத்த கண்ணீர் வடிப்பது கண்கூடு, சனவரியில் இருந்து தொடரந்து தினமும் நூற்றுக்கணக்கான தமிழின உடலங்களை கண்டு எனது கண்களின் நீர் வற்றி விட்டது. கருகிபோன உடலங்களை போல எனது கண்களும் வரண்டு விட்டது. ஆனால் உள்ளம் துவண்டு விடக்கூடாது,
சாவு இன்றல்ல நேற்றல்லா என்றும் நம்மீது விழும் பூமாலை, சிந்தனை செய்யுங்கள் நீங்கள் உறங்கி எழுந்து உண்டு உடுத்தி பயணித்து பணித்து மீண்டும் உறங்க செல்லும் நாட் சக்கரத்தில் ஈழத்தில் நாளை என்ன என்றல்ல அடுத்த வேளை என்ன என்று தெரியாமல் சாப்பிடும் போது குண்டு விழுமா அல்லது அமரும் போது குண்டு விழுமா என்று எதிர்பாராது கடந்த 30 வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம் இனம் ஆனால் இன்று தமிழர்கள் அனைவரும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் என்று நினைத்து கொண்டு மத்திய அரசு எம் இனத்தின் மீது கொடிய அவலத்தை தொகுத்துள்ளது.
ஹைட்டஜன் குண்டு
படையணிகள், ஆயுதங்கள், நுட்பங்கள் மற்றும் நேரடியாகவும் இறங்கி பார்த்துவிட்டது. இவற்றிற்கெல்லாம் அஞ்சாச இமயங்களை கண்ட
கயவர்கள் உலகத்திலேயே தடை செய்யபட்ட ஹைட்டஜன் குண்டுகளை பாவித்து மகிழ்ந்திருக்கிறது. அவர்கள் என்ன கேட்டார்கள் எங்களையும் சுதந்திரமாக வாழ விடுங்கள் என்றுதானே கேட்டார்கள். சுதந்திர வேள்வியின் மூலம் விதை கொண்டு எழுந்த இந்தியாவே தமிழீத்தின் சுதந்திர தாகத்தை ஹைட்டரஜன் குண்டுகள் மூலம் பொசுக்க நினைத்தாய்
வாழ்க இந்தியா
நீங்கள் எரிந்த ஹைட்டஜன் குண்டு சில தமிழ் உடலங்களை எரித்தது. ஆனால் அந்த ஹைட்டஜன் குண்டு உலகம் முழுவதும் இதுவரை முக்கி முனங்கி கிடந்த தமிழர்களை உள்ளத்தில் இருந்த சுதந்திர பந்ததை எரிக்க நெருப்பாய் மாறிவிட்டது. கருகிய உடலங்களை கண்டு கலங்கி விடாதீர்கள் இந்த உடலங்களின் ஆண்மாக்களை இனி உங்களுக்குள் தாங்குங்கள்,
இவர்கள் பகடான வாழ்விற்காகவோ கைநிறய சன்மானத்திற்காகவே களம் கானவில்லை, இவர்களின் அத்தனை ஆண்மாக்களும் எம் மக்களுக்காக சுதந்திராமான ஒரு தேசம் என்ற கனவை கொண்டே களம் இறங்கினார்கள். வரலாறு தமது பக்கங்களில் இதுவரை புரட்சிகள் தோல்வி என்று எழுதவில்லை,
அதிலும் உலகிற்கே நாகரிகத்தை கற்றுதந்த தமிழினம் தொல்வி அடைவதா?? சில இழப்புகளை கண்டு கலங்காதீர்கள், ஹைட்ரஜம் குண்டுகள் மட்டுமல்ல இனி அணுகுண்டு போட்டாலும் தமிழீழ போராட்டாம் அந்த அணுகுண்டின் சக்தியை விட பண்மடங்கு அதிகரிக்கும் ஆம் இனி உலகெங்கும் வாழும் தமிழர்
உணர்வு மங்கி விட்டாதா உணக்கு,
சீக்கியர்கள் மீதுநடத்த பட்ட வண்முறைக்கு பதில் சொல்ல சொல்லி இன்று ஒரு சீக்கியர் சிதம்பரத்தின் மீது சூவை கொண்டு எறிந்தார். அவர் உணர்வாளர் இன்று உனது இனமே எரிகிறது, ஓட்டு கேட்டு இவர்கள் வருவார்கள், ஆம் அதற்குள் ஈழம் என்ற இனத்தை அழித்து விட்டு வருவார்கள்.
படங்களை பாருங்கள் உருத்தெரியாமல் ஆக்கிவிட்டார்கள், இவர்களின் கனவுகளுக்கு உலக தமிழினமே உருகொடு
கருகினாலும் கலங்க மாட்டோம், தமிழா , களைப்பு நீங்கி எழடா
தோல்வி வெற்றியின் முதல் படி மீள்வோம் மீட்போம் தமிழரின் தாகம் தமிழ் ஈழம் என்று சங்கே முழங்கு
|
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum
No comments:
Post a Comment