வாரிகொட்டுகிறார்கள்
,வரிந்து கட்டுகிறோம்டர்பன்
.சித்திரை,4.என் இனிய தமிழ் மக்களே பூவுக்குள் பூகம்பம் வைத்த(மன்னிக்கவும்) கிரிக்கேட்டுக்குள் இந்தியதலையெழுதை
வைத்த சரத் பவார் அண்ட் கம்பேனி இந்த முறை ஒட்டு மொத்தஇந்தியாவின்இறையாண்மையை
தென் ஆப்பிரிக்காவில் அடகு வைத்து விட்டோம்.ஒரு
பொருளாதார நன்பர் கூறுகிறார் இந்திய தேர்தல் செலவை விட 13மடங்கு தென் ஆப்பிரிக்காவில்நடக்கும்
ஐ.பி.எல் கிரிக்கேட்டிற்காக செலவிடப்படுகிறதாம். பெருமையுடன்குறிப்பிடுகிறார் அரசியல்வாதி
(மன்னிக்கவும்)கிரிக்கேட் வாதிஇன்று
நாளிதழ்களை பாருங்கள் ஆச்சர்யமாக இருக்கிறதா இந்தியாவின்10பிரதிகள் போகும்பத்திரிக்கைக்கும்
கூட 47 லட்ச ரூபாய் கொடுக்கிறார்கள் விளம்பரத்திற்குஅப்படிஎன்றால் முன்னனிபத்திரிக்கைகளுக்கு
எவ்வளவு கொடுப்பார்கள்,எங்கிருந்து
வந்தது இந்த பணம் இவர்களுக்கு ஆண்டவன் அள்ளிகொடுத்தாரா,அல்லது உலக வங்கி நல்லகாரியம்
செய்கிறீர்கள் , இன்னும் உற்சாகத்துடன் செய்யுங்கள் என்றுவாரிகொடுக்கிறதா?ஒரு
சிறு கணக்கு உங்களுக்குஐ
.பி.எல் செலவழிக்கும் பணத்தில் இந்தியாவில் 50 ஆயிரம் பெரியபாசணத்திற்கு உதவும் ஏரிகளுக்குதூவாரலாம்
, தென் இந்தியாவின் அத்தனை நதிகளையும் இனைத்து விடலாம்,மராட்டியத்தில் இருந்துநேரடியாக
ராமநாத புரத்திற்கு கால்வாய் வெட்டி வீனாக ஆந்திர கடலில்கடக்கும் கிருஷ்னா, மாண்டி, வருடம்முழுவதும்
வீனான ஓடி கிருஷ்னாவுடன் கடக்கு தருபா போன்ற நதிகளின் 10சதவித நீராவது எனதுஇராமநாதபுர
மக்களுக்கு விவசாயத்திற்கு வேண்டாம்(மதுரைக்காரர்கள்சண்டைக்கு வருவார்கள்)குடிக்கவாவது
நல்ல தண்ணீர் தரலாம். பிள்ளைகள் மன நிறைவுடன் படிப்பைதொடரும்,ஓ
தமிழ்நாடு என்றால் ஹிந்தி வாலாக்களுக்கு வேப்பங்காய் சரிராஜஸ்தானில் யமுனா நதியை திருப்பிவிடலாம்
, யுனஸ்கோ 2005 -ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இன்னும்ராஜஸ்தானில் 60 ஆண்டுகளில்மக்கள்
வசிக்க வசதியில்லாத நிலங்களாக 63 சதவிதம் மாறிவிடும் என்றுஅறிக்கைவிடுகிறது. குடி தண்ணீர்வசதியில்லாமல்
சுமார் 170 கிராமங்கள் திகில் கிராமங்களாகின. ஒரு காலத்தில்மானும் மயிலும் விளையாண்டஇந்த
மண்ணில் மனிதன் புகுந்து கிராமங்களை உருவாக்கி அவைகளைவிரட்டினான். அவைகள்சென்றதால்
இயற்கை அண்ணை கோபித்து கொண்டால் விளைவு இன்று புல்பூண்டு கூட வளரவில்லை. ஒருசாதாரன
கணக்கு ஒரு இடத்தை மேடாக்க அதன் அருகில் பள்ளம்,தோன்டவேண்டும் தோண்டுவதற்குஇளிச்சாவாய
மக்கள் இருக்கும் போது ஏன் மற்ற இடங்களில் இருந்து சுரண்டவேண்டும். ஆனால் இங்குபாதாளத்தில்
இருந்து கூட மண் எடுத்து சுரண்ட ஆரம்பித்து விட்டார்கள். இன்றுவட இந்தியாவில் ஒருசாதாரன
கூலி வேலைக்கு கிடைப்பது வெரும் ரூ.30 பெண்களுக்குஆண்களுக்கு ரூ.45 குழந்தைகளுக்குரூ
.20இந்த
முறை தேர்தலை தள்ளிப்போட்டால் என்ன என்று ஐ.பி.எல்கமிட்டியில் விவாதிக்கபட்டதாக ஒரு சோக்அடித்தார்கள்
. நல்ல வேளை சிதம்பரனார் கையில் உள்துறையும் காதுகேட்க்காதஓட்டை வாளியில்தண்ணீர்
இறைக்கு பிரதமர் இருக்கிறார். சரத் அண்ட் கம்பேனி மட்டும்பிரதமராக இருந்தால் கண்டிப்பாகதேர்தல்
ஆணையம் கலைக்க பட்டு இருக்கும். அந்த கபளேகரத்தில்வெற்றிகரமாக ஐ.பி.எல் ஐ நடாத்தில்வெற்றி
கண்டிருப்பார்கள். அதன் பிறகு ஜூன் ஜூலை மாதத்தில் தேர்தலைநடத்தி இருப்பார்கள். ஆனால்நல்ல
வேளையாக சனநாயகம் காக்கபட்டு இருக்கிறது.இருப்பினும்
நாங்கள் சோர்ந்து போகவில்லை, இதோ தென் ஆப்பிரிக்காபுறப்பட்டு விட்டோம். சிலவாரங்களுக்குள்ளே
திட்டமிட்டு, அத்தனை வீரர்களுக்கு ரூம் போட்டு, விமான டிக்கேட்போட்டு,சாப்பாடுபோட்டு
பாதுபாப்பு போட்டு, போட்டு , போட்டு, ட்டு,ட்டு,டு,டு,டு உஸ் அப்பாடகண்ணை கட்டுது.எங்கிருந்துடா
வந்தது உங்களுக்கு இவ்வளவு பணம்இதற்க்குதான
இரண்டு பொருளாதார மேதைகளை டில்லிக்கு அனுப்பினோம்.கேட்க்கவேண்டாமா பணம்எங்கிருந்து
வந்தது என்று, 1000 லஞ்சம் வாங்கினால் டி.வி.யில் காண்பித்து சந்திசிரிக்கைவைக்கிறார்கள் டி.விகாரர்கள்
ஆனால் இங்கெ கோடிக்கணக்கில் ஊழல் நடக்கிறது நாம் எல்லாம்கை கொட்டி மகிழ்ந்துபார்க்கிறோம்
.உங்களுக்கு
தெரியுமா பிரபல மீடியாக்கள் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பவேண்டும்என்று கிரிக்கேட் நடக்கும்போது
எங்களது நிகழ்விற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்றுகண்டிசன் போட்டார்கள். பேடாவெண்ணை
என்று அக்ரிமெண்ட் பேப்பரை கிழித்து விட்டு சென்றுவிட்டார் AFPகம்ர்சியல் மேனேசர் கிளடர்சலன்ஸ்
, அவரை தொடர்ந்து அனைத்து மீடியாக்களும் வெளியேறகடைசியில் பெப்சி உமா சாரி(இந்திராவிடம்
) கொஞ்சி கூத்தாடி மீடியாக்களை மீண்டும் மீட்டிங்கிற்குஅழைத்தனர். நாங்கள் விளயாட்டிற்குமுக்கியத்துவம்
தருவோம் ஆனால் இது விளையாட்டு அட்டவனையில் வரும்விளையாட்டல்ல.எப்போழுதும்
போல் செய்தி வெளியிடுவோம் என்று சொல்லி விட்டு ஐ,பி.எல்லின் அக்ரிமெண்டை டஸ்ட்பின்னில்
போட்டு விட்டு காமன் புரோட்காஸ்ட் அக்ரிமெண்டில் கையெப்பம்இட்டனர். அங்கும் பலபத்திரிக்கை
ஏஜென்சிகளுக்கு கோடிகளை கொடுக்க பார்த்தார்கள். அவர்களும்போங்கடா வெங்காயங்களாஉலகமே
பொருளாதார சிக்கலில் இருக்கும் பொது உங்களுக்கு ஏதுடாஇவ்வளவு பணம் என்று கேட்க்கஅவர்களும்
ஹி ஹி என்று இளித்துவிட்டு துண்டை கானோம் துணியைகாணோம் என்று ஓடி இருக்கின்றனர் . அட காந்தியே இதற்குத்தானாநீ சுதந்திரம் வாங்கி கொடுத்தாய் உனது ஊரில் கூட பருத்திவிவசாயி குடும்பத்துடன் செத்து இருக்கின்றானே.இந்த
ஐ.பி.எல் படத்தில் இன்னேரு சுவரஜ்யமான விடயம் என்னவென்றால், வரும் பணம் ஆனாலும் சரி செலவழிக்கும் பணம்ஆனாலும் சரி யாரும் கேட்க்க முடியாது. ஏன் என்றால் சுதந்திரமானஅமைப்பு அவர்கள் தருவது தான் கணக்கு.உங்கள்
ஊரில் இருந்து 107" பைப் பொட்டு பெப்சிக்காக தண்ணீர் எடுத்துநீங்கள் சுவாசிக்கும் காற்றையே உறிஞ்சி அதை புட்டியில் அடைத்துஉங்களுக்கே 12 ரூ விற்கிறான். அதற்கு அவன் செலவழிக்குபணமோ வெறும் 1.8 பைசா. (அனக்சரி 12:8) வருடாந்திர ரிப்பேர்ட்பொப்சிகோ இந்தியா 2007- ஆனால் அங்கு பணிபுரியும் வாட்ச்மேனுக்கு வெறும் 3000 ரூபாய் சம்பளம் அதிலும் உடல் நலம்சரியில்லை என்று விடுப்பு எடுத்தால் சம்பளம் கட்,ஜெய்
ஹோ, ஜெய் ஹோ ஐ.பி.எல் ஜெய் ஹோ--
உலக செய்திகள் ஒரு அலசல்,
ஒரு தனித்த பார்வை
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum
No comments:
Post a Comment