Thursday, November 3, 2011

RSS இயக்கத்தின் சூலாயுதமும்! விஜய்யின் வேலாயுதமும்!

கடந்த சிலவருடங்களாக தமிழகத்தில் இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்த, ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை குலைக்க உன்னைப்போல் ஒருவன், வேலாயுதம் போன்ற படங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருகின்றன.

இவைஅனைத்தும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் சதி செயலாகவே பார்க்க முடிகிறது. தமிழகத்திலே தங்கள் இயக்கங்களை வளர்க்க ஹிந்துத்துவா சக்திகள் தொடர்ந்து முயன்று வந்தன. பெரியார், அண்ணா போன்ற சீர்திருத்தவாதிகளின் கடுமையான உழைப்பின் காரணமாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் தமிழகத்தில் சரியாக கால்பதிக்க முடியாத ஒரு சூழல் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பவே இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்ப்படுத்தும் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.

ஹிந்துத்துவா இயக்கத்தை ஒரு மாநிலத்தில் வேரூன்ற செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு இஸ்லாமிய எதிப்புணர்வு என்கிற சக்தி தேவைபடுகிறது. அந்த சிந்தனையை ஏற்படுத்தவே ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்துத்துவா இயக்கங்கள் தமிழ் சினிமாவை பயன்படுத்தி வருகின்றன. இதன் மூலம் தங்கள் ஹிந்துத்துவா சித்தாந்தத்தை தமிழகத்தில் பரப்பவும் அதேநேரம் முஸ்லிம் எதிர்ப்பு வெறி உணர்வை ஏற்படுத்தவும் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. இதன் ஒரு பகுதிதான் ஜிஹாத் மற்றும் முஸ்லிம் பயங்கரவாதம் என்ற பூச்சாண்டி எல்லாம்.

இந்தியா முழுவதும் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியது ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமே என்பது நிரூபனமான பின்னரும் அதை பற்றி எந்த சினிமாவும் வாய்திறக்க வில்லை. இப்படி இருக்க இஸ்லாமிய எதிர்புணர்வை ஏற்படுத்தும் இதுபோன்ற
படங்களை எடுத்து ஹிந்துக்கள் உள்ளத்தில் முஸ்லிம்களை பற்றிய HATE POLICY (வெறுப்புணர்வு) உண்டாக்கி இதன் மூலம் தங்கள் ஹிந்துத்துவா சித்தாந்தத்தை தமிழகத்தில் பதிக்கும் ஆர்.எஸ்.எஸ். யின் செயல்திட்டமே இது.

ஈழத்திலே தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள், தமிழகத்திலே தமிழக மீனவர்கள் கொல்லப்படுகிறார்கள், இதை பற்றி காட்ட எந்த சினிமாவுக்கும் துப்பில்லை. நமது ஹிரோக்களுக்கும், தயாரிப் பாளர்களுக்கும் பயங்கரவாதி ராஜபக்சேவிடம் இருந்து தமிழர்களை காப்பது போல் படம் எடுக்க முடியவில்லை. சமகாலத்தில் நடந்த ஒரு கோரத்தை பற்றி சொல்லி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட்டு விட்டு கலவரம் செய்ய ஆர்.எஸ்.எஸ்.க்கு துணை போவதேன்?

இது போன்ற படங்களை எடுக்க ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பின்னணியில் இருந்து பொருளாதார உதவிகளை செய்து வருகின்றது என்றே நம்பத்தோன்றுகிறது. அத்வானியின் தமிழக வருகையும் விஜய்யின் வேலாயுதம் படம் வெளியீடும் ஒரு கலவரத்துக்கான ஒத்திகையாகவே நம்மால் பார்க்க முடிகிறது.

நட்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.

No comments: