Monday, August 8, 2011

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) என்றால் என்ன?

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு என்பது போதுமான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயு நிலையிலுள்ள ஹைட்ரோகார்பன்களின் கலவையை, அழுத்தமுள்ள கலன்களில் திரவமாக மாற்றப்பட்டு இருப்பதே ஆகும். எளிதில் சேமிக்கவும்,எளிதில் எடுத்துச்செல்லுவதற்கு ஏற்றவாறு இவ்வாறு செய்யப்படுகிறது. இவை இயற்கை வாயு அல்லது கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும்போதும் பெறப்படுகின்றன.பியூட்டேன் மற்றும் புரொப்பேன் போன்றவை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவிலுள்ள முக்கியமான ஹைட்ரோகார்பன்களாகும். மற்ற ஹைட்ரோகார்பன்களான ஐசோ பியூட்டேன், பியூட்டலின், புரொப்பைலீன் மற்றும் என்-பியூட்டேன் போன்றவை திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவில் மிகவும் குறைந்த அளவிலேயே இருக்கும்.


திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயுவின் (LPG) உபயோகங்கள் என்ன?

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு பாதுகாப்பான, சிக்கனமான,சுற்றுப்புறசூழலுக்கு ஏற்ற, ஆரோக்கியமான சமையலுக்கு ஏற்ற எரிபொருளாகும்.பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமன்றி இந்த எரிவாயு பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிகரீதியான உபயோகத்திற்கும் ஏற்ற நல்ல எரிபொருளாகும்.

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு பாதுகாப்பான, சிக்கனமான,சுற்றுப்புறசூழலுக்கு ஏற்ற, ஆரோக்கியமான சமையலுக்கு ஏற்ற எரிபொருளாகும்.பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மட்டுமன்றி இந்த எரிவாயு பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் வணிகரீதியான உபயோகத்திற்கும் ஏற்ற நல்ல எரிபொருளாகும்.
சந்தையில் கிடைக்கும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலியவாயு (LPG) சிலிண்டர்கள் அளவுகள் என்ன?

பொதுவாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு சிலிண்டர்கள் கிராமப்புற பகுதிகளுக்கும், மலைப்பிரதேசங்களுக்கும் தொலைதூரப்பகுதிகளுக்கும் ஏற்றவாறு5 கிலோ எடையிலும், பொது உபயோகத்திற்காக 14.2 கிலோ எடையிலும் கிடைக்கிறது.வணிகரீதியான மற்றும் தொழிற்சாலை உபயோகத்திற்கு 19 கிலோ மற்றும் 47.5கிலோவில் இவ்வாயு சிலிண்டர்கள் கிடைக்கின்றன. சில தனியார் நிறுவனங்கள் 12கிலோ எடை கொண்ட இந்த எரிவாயு சிலிண்டர்களை பொது உபயோகத்திற்காக விற்கின்றன.

வீட்டு உபயோகத்திற்கு கிடைக்கும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG)சிலிண்டர்கள் வாகனங்களிலோ அல்லது இதர வணிகரீதியான தேவைகளுக்கோ உபயோகிக்கலாமா?

இல்லை. வீட்டு உபயோகத்திற்கு வழங்கப்படும் LPG சிலிண்டர்கள், LPGகட்டுப்பாட்டு ஆணையின் படி, வாகனங்களிலும், இதர வணிகரீதியான தேவைகளுக்கும் உபயோகிக்கக்கூடாது.

இந்தியாவில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் யாவை?

SLPG விற்பனையில் ஈடுபட்டுள்ள பொது நிறுவனங்களாவன
இந்தியன் ஆயில் நிறுவனம் (http://ping.fm/tMcRv)
பாரத் பெட்ரோலியம் கார்ப்போரேசன் (http://ping.fm/3ACI8)
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்போரேசன்(http://ping.fm/aE4D8)
இவ்வாயு விற்பனையில் ஈடுபட்டுள்ள சில தனியார் நிறுவனங்களுக்கான உதாரணங்கள்
ஸ்ரீ சக்தி எல்.பி.ஜி நிறுவனம் (http://ping.fm/QAFAq)
எஸ்.எச்.வி எனர்ஜி நிறுவனம் (www.supergas.com)

திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) இணைப்பு வாங்குவதற்கான செயல்முறைகள் என்ன?

வீட்டு உபயோகத்திற்கு இணைப்பு பெறுவதற்கு மேற்கூறிய நிறுவனங்களின் விநியோகஸ்தரை அணுகவேண்டும். உங்களுடைய அருகாமையிலுள்ள விநியோகஸ்தரைக் கண்டுபிடிக்க மேற்கூறிய நிறுவனங்களின் இணையதளத்தை பார்க்கவும்.
புதிய இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போது கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை இருப்பிடச்சான்றாக காண்பிக்கவேண்டும்.
குடும்ப அட்டை, மின்சார இரசீது, தொலைபேசி இரசீது, பாஸ்போர்ட்,வேலையளித்தவரின் சான்றிதழ், அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது பெறப்பட்ட கடிதம், வீட்டு பதிவு பத்திரம், எல்.ஐ.சி பாலிசி, வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு வாடகை இரசீது, வருமான வரித்துறையால் வழங்கப்பட்ட நிரந்தர கணக்கு அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவையாகும். இதுதவிர சில மாநிலங்களில் குடும்ப அட்டை, எரிவாயு இணைப்பு பெற கட்டாயமாக காண்பிக்கப்படவேண்டும்.
காஸ் சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டருக்கான வைப்பு தொகை செலுத்தப்பட வேண்டும். இவ்வைப்பு நிதி கட்டியவுடன் இணைப்பு ரசீது (Subscription voucher) கொடுக்கப்படும். இந்த இணைப்பு ரசீது பிற்கால செயல்பாடுகளுக்கு தேவைப்படுவதால், இதனை கவனமாக வைத்துக்கொள்வது அவசியம்.

பொது உபயோகத்திலுள்ள எல்.பி.ஜி இணைப்பினை இன்னொரு இடத்திற்கு மாற்றுவதற்கான செயல்முறைகள் என்ன?

i. ஒரே நகரத்தில் அல்லது அருகாமையிலுள்ள நகரங்களுக்கு மாற்றுதல்
எல்.பி.ஜி வாயு வழங்கியுள்ள விநியோகஸ்தரிடம், இணைப்பு இரசீதைக் காட்டி மாறுதலுக்கான ஆவனத்தை பெற வேண்டும்
இணைப்பு இரசீதுடன், மாறுதலுக்கான ஆவனத்தையும் புதிய விநியோகஸ்தரிடம் கொடுக்கவேண்டும். புதிய விநியோகஸ்தர் இதனைப் பெற்றுக்கொண்டு உண்மையான இணைப்பு இரசீதில் ஒப்புகை சீல் இட்டு இணைப்பு மாறுதலை தருவார். இந்த எரிவாயு இணைப்பு மாறுதல் மற்றும் இணைப்பு இரசீதும் புதிய விநியோகஸ்தரிடமிருந்து பத்திரமாக மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இப்போது ரெகுலேட்டர் மற்றும் சிலிண்டரை பழைய விநியோகஸ்தரிடம் ஒப்படைக்கத்தேவையில்லை. இணைப்பு பெற்றவர் தங்களுடைய புதிய இருப்பிடத்திற்கு இவற்றை எடுத்துக்கொண்டு செல்லலாம்.
ii. தொலைதூரப் பகுதிகளுக்கு எரிவாயு இணைப்பினை மாற்றுதல்
எரிவாயு இணைப்பு இரசீதுடன், இணைப்பு மாறுதலுக்கான வேண்டுதல் கடிதத்தை விநியோகஸ்தரிடம் அளித்தவுடன், அவர்கள் அதைப்பெற்றுக்கொண்டு முடிவு இரசீதை வாடிக்கையாளரிடம் கொடுப்பார்கள். வாடிக்கையாளர் சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டர் ஆகியவற்றை விநியோகஸ்தரிடம் திரும்பக் கொடுத்தவுடன்,விநியோகஸ்தர் வாடிக்கையாளரின் வைப்புத்தொகையினை திரும்பக்கொடுத்துவிடுவார்.
முடிவு இரசீதில் குறிப்பிட்ட வைப்புத்தொகையினை புதிய இடத்திலுள்ள விநியோகஸ்தரிடம் செலுத்தி வாடிக்கையாளர் மீண்டும் இணைப்பினை பெற்றுக்கொள்ளலாம். புதிய விநியோகஸ்தரிடம் பெற்ற இணைப்பு இரசீதினை வாடிக்கையாளர் பத்திரமாக வைத்துக்கொள்ளவேண்டும்


மூலம்: எண்ணெய் விற்பனை செய்யும் நிறுவனங்களின் வலைத்தளம்


Rajaghiri Gazzali

No comments: