Wednesday, July 13, 2011

Visit: www.mohamedbunder.tk

குறைந்த விலை மொபைல்போன், காஸ்ட்லியான மொபைல்போன் எதுவாயினும், அதை பராமரிக்கும் முறைகளிலேயே அதன் ஆயுட்காலம் இருக்கிறது. சரியான பராமரிப்பு இல்லாத மொபைல்போன்கள் அதன் மதிப்பை வெகுசீக்கிரத்திலேயே இழந்துவிடும். சில எளிய முறைகளை கையாண்டால், உங்கள் மொபைல்போனின் மெருகு குலையாமல் நீண்ட காலம் பயன்படுத்த முடியும். உங்களுக்காக சில எளிய வழிமுறைகள்...

தட்பவெப்பம்:

மொபைல்போன்கள் தட்பவெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதிக குளிர்ச்சியான மற்றும் அதிக வெப்பமான இடங்களில் மொபைல்போனை தொடர்ந்து வைத்திருக்க வேண்டாம். தவிர, மழைச்சாரல் அடிக்கும் ஜன்னல் ஓரங்களிலும் வைக்க வேண்டாம். இதனால், போனின் ஹார்டுவேர்கள் எளிதாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

சார்ஜ் செய்யும்போது கவனம்:
போன் சார்ஜில் இருக்கும்போது போனில் பேசுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். மின் இணைப்பை துண்டித்துவிட்டு அதன்பின் பேசுவது பாதுகாப்பானது.

பேட்டரி சார்ஜ் செய்வது எப்படி:

பேட்டரியில் சார்ஜ் முழுவதும் தீர்ந்தபின் மீண்டும் சார்ஜ் செய்யுங்கள். அடிக்கடி சார்ஜ் செய்வதால் உங்கள் பேட்டரியின் ஆயுள் சீக்கிரத்தில் போய்விடும். மேலும், சிறிது காலத்தில் பேட்டரி தனது சேமிப்பு திறனை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடும்.

போன் கவர்:

உராய்வுகளால் போனின் டிஸ்பிளே மற்றும் இதர முனைகள் பாதிக்கப்படும். பிளாஸ்டிக் மற்றும் லெதர் உறைகளில் போனை பாதுகாப்பாக வைத்திருக்க பழகுங்கள்.

பாதுகாப்பு:

குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் போனை வைக்க பழகிக்கொள்ளுங்கள். போனின் கீபேடு லாக்கை ஆக்டிவேட் செய்து வைத்துக்கொள்வது சிறந்த வழி. மேலும், தினமும் போனை மெல்லிய துணியால் சுத்தம் செய்யுங்கள்.

மெமரி கார்டு:

வங்கி ரகசிய எண்கள் உள்ளிட்ட அதிமுக்கியமான தகவல்களை மெமரி கார்டில் பதிவு செய்ய வேண்டாம். சில சமயங்களில் போன் தொலைந்துபோனால், அதன் மெமரி கார்டில் உள்ள தகவல்களை அடுத்தவர் எளிதில் எடுத்து துஷ்பிரயோகம் செய்யக்கூடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

சார்ஜ் சேமிப்பு:

டிஸ்பிளேயின் பிரகாசத்தை குறைத்து வையுங்கள். இதன்மூலம், பேட்டரியின் சார்ஜ் சீக்கிரம் காலியாகாது. போன் பேசுவதைவிட எஸ்எம்எஸ் மூலம் தகவல்களை பரிமாறினால்கூட பேட்டரியில் சார்ஜ் சீக்கிரம் இறங்காது. இதேபோன்று, மற்றொன்று முக்கிய விஷயம், தேவையில்லாமல் வைபரேட்டர் மோடை ஆன் செய்ய வேண்டாம். வைபரேட்டர் மோடு பேட்டரி சார்ஜை வேகமாக உறிஞ்சிவிடும்.

உஷார்:

பீச் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போது பாக்கெட்டில் மொபைல்போனை போட்டுக்கொண்டு செல்ல வேண்டாம். தண்ணீருக்குள் மொபைல்போன் விழுந்தால், அதன் ஹார்டுவேர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது.

பேட்டரி:

பேட்டரி பழுதாகிவிட்டால், போலி தயாரிப்புகளை வாங்காமல் விலை கூடுதலாக இருந்தாலும், தரமான மற்றும் அந்தந்த நிறுவனத்தின் ஒரிஜினல் பேட்டரிகளை வாங்குங்கள்.

டச் ஸ்கிரீன் போன்களின் பராமரிப்பு:

1. சாதாரண மொபைல்போன்களைவிட டச் ஸ்கிரீன் போன்களை பராமரிப்பது சற்று கடினமான விஷயம். டச் ஸ்கிரீன் போன் வாங்கும்போதே அதற்கு மேல் தகுந்த உறையை லேமினேஷன் செய்துகொள்ள வேண்டும்.

2. டச் ஸ்கிரீன் டிஸ்பிளேயில் விரலால் மெதுவாக தொட்டு அப்ளிகேஷன்களை இயக்க பழகுங்கள். நகங்களை கொண்டு சிலர் இயக்குவதை கண்டிருக்கிறோம். அது நாளைடைவில் டிஸ்பிளேயில் குறிப்பிட்ட இடங்களில் கீறல்களை ஏற்படுத்தி போனின் மவுசை குறைத்துவிடும்.

3. பெரும்பாலும் டச் ஸ்கிரீன் போன்களை சட்டை பாக்கெட்டில் போடுவதை தவிர்க்கவும். அப்படி சட்டை பாக்கெட்டில் போடும்போது போனுக்கு எக்ஸ்ட்ரா கவர் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இதேபோன்று, போனின் டிஸ்பிளேயை லாக் மோடில் வைக்கவும்.

4. காந்த சக்தியுள்ள பகுதிகளில் டச் ஸ்கிரீன் போனை வைத்திருப்பதும், பயன்படுத்துவதையும் தவிர்க்கவும்.

5. மெல்லிய காட்டன் துணிகளை கொண்டு தினமும் டிஸ்பிளேயை துடைத்து சுத்தப்படுத்தவும்.

மேற்கண்ட சில எளிய பராமரிப்பு முறைகளை கையாண்டால் உங்கள் போன் என்றும் புதுசு போல் இருக்கும் என்பது மட்டுமல்ல, உங்கள் கவுரத்தின் அடையாள சின்னமாக இருக்கும் என்பதும் உறுதி.


Visit: www.mohamedbunder.tk

No comments: