Sunday, July 24, 2011

Source : http://ping.fm/Lh5LN



மக்களே! ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ருதான் மஃரிபு அல்ல! மிருகங்கள் பறவைகள் உட்பட உலக ஜீவராசிகள் அனைத்தும் தங்கள் நாளின் துவக்கத்தை காலை பொழுதில்தான் துவக்குகின்றன. ஆனால் முஸ்லிம்களாகிய நம்மில் பெரும்பான்மையினர் ஒரு நாளின் துவக்கம் சூரியன் மறைந்த பின் மஃரிபு வேளை என்று நம்பியுள்ளனர்.

யூதர்கள் அவர்கள் நாளை மஃரிபு வேளையில் துவங்குகிறார்கள் என்றால் அவர்களை பின்பற்றுவதற்கு முஸ்லிம்கள் நாம் என்ன அறிவிழிகளா? ஒருநாளின் துவக்கம் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டுதல்கள் இருக்க யூதர்களின் வழிமுறையை முஸ்லிம்கள் கண்மூடி நம்புவது எந்த விதத்தில் நியாயம்?

குர்ஆன் கூறும் நடுத்தொழுகையை பேணிக்கொள்ளுங்கள் (2:238) என்ற கட்டளை பற்றி நபிகளாரிடம் நடுத்தொழுகை எது? என்று வினவப்பட்டபோது அது அஸர் தொழுகை என்றார்கள். தினம் நபிகளார் (ஸல்) அவர்களின் இறுதித் தொழுகை வித்ரு ஆக இருந்தது. ஆக ஒரு நாளின் நடுப்பகுதி அஸர் என்றும் இறுதிப்பகுதி இரவு என்றும் தெளிவாகிவிட்ட பின்னர் அந்த நாளின் ஆரம்பம் ஃபஜ்ரு வேளைதான் என்பதை புரிந்து கொள்வதில் என்ன குழப்பம் இருக்கின்றது? நபி (ஸல்) அவர்கள் தமது ரமழான் இஃதிகாஃபை ஃபஜ்ரு தொழுதுவிட்டு ஆரம்பித்தார்கள், பெருநாள் தினத்தின் ஃபஜ்ரு வேளையில்தான் இஃதிகாஃபை முடித்தார்கள்.



எனவே ஒரு நாள் என்பதின் துவக்கம் ஃபஜ்ருதான் என்பதை நபி (ஸல்) நடைமுறை படுத்திவிட்டு சென்றபிறகும்கூட முஸ்லிம்கள் எவ்வித ஆதாரமும் இல்லாமல் மஃரிபிலிருந்து நாட்களை துவக்குவது துர்பாக்கிய நிலையில்லாமல் வேறென்ன?. எனவே மக்களே பிறை குழப்பத்தில் பெரும் பங்குவகிக்கும் ஒரு நாளின் ஆரம்ப நேரத்தை புரிந்துகொள்ளுங்கள். இரவு பகலை முந்தமுடியாது (36:40) என்ற இறைவசனத்திற்கேற்ப ஒரு நாளின் ஆரம்பம் ஃபஜ்ர்தான், மஃரிபு அல்ல என்பதை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.



Click here to continue : http://ping.fm/MLepf

No comments: