ஹீரோயிசம்: கதாநாயகர்கள் ரசிகர்கள் மத்தியில் தங்கள் இமேஜை உயர்த்திக்கொள்ள ஒவ்வொரு படத்திலும் ஏதாவது புதுமையாக தங்கள் படங்களில் இடம்பெற வேண்டும் என்பதற்காக வீர வசனமாக "பன்ச் டயலாக்" என்ற பெயரில் சொல்லும் வசனங்களைஎல்லாம் வீட்டில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் பேசி அவர்கள் பேச்சுக்கு மரியாதை இல்லாமல் எதிர்த்து பேசுவது வழக்கமாகிவிட்டது. நிஜ வாழ்வில் வன்முறைக்கும், ஒழுங்கீனமான நடவடிக்கைகளுக்கும், ஏமாற்றுவதற்கும் சினிமாவும் ஒரு காரணமாக அமைகிறது. சினிமாவில் ஹீரோ கெட்டவராக முதலில் காட்டப்பட்டாலும் பின்பு திருந்தி நல்லவராக மாறுவதுபோல முடித்துவிடுவார்கள். ஆனால் நிஜ வாழ்வில் இதெல்லாம் சாத்தியமாவதில்லையே??
நகைச்சுவை: மேலும், நகைச்சுவையிலும் இரட்டை அர்த்த வசனங்கள் மட்டுமல்லாது, மற்றவர்களை தரக்குறைவாக பேசி அவர்கள் மனதைப் புண்படுத்துவதைக்கூட ஒரு நகைச்சுவையான விஷயமாகக் கருதுகின்றனர்.
உதாரணமாக, இதற்கு முந்தைய கால கட்டத்தில் கவுண்டமணி என்ற நகைச்சுவை நடிகர், மற்றவர்களை (செந்திலை அல்ல) அவர்களது உடல் அங்கங்களை வர்ணித்து "இந்த மூஞ்சிக்கு இது தேவையா" என்பது போன்ற வசனங்களை பேசி நடித்து வந்தார். (இப்படி அடுத்தவர்களை நோகடிக்காமல் அவர் நடித்த நகைச்சுவைக் காட்ச்சிகளை நானும் ரசித்திருக்கிறேன்.) இப்போது கவுண்டமணிதான் எனக்கு ரோல் மாடல் என்று பகிரங்கமான ஒப்புதலுடன் சந்தானம் என்பவர் நகைச்சுவை செய்து கொண்டிருக்கிறார். அவரும் பெரும்பாலான திரைப்படங்களில் அடுத்தவர்களை தரக்குறைவாகப் பேசியே நடிப்பதை பார்க்க அநாகரீகமாகவும், எரிச்சலடையவும் செய்கிறது. நகைச்சுவைக்காகத்தான் என்றாலும் காமடி செய்வதற்கு வேற ட்ராக்கே இல்லையா என்ன? (சந்தானம் ரசிகர்கள் கோபப்பட வேண்டாம்; உண்மையை உணருங்கள்.) வேண்டுமானால் வடிவேலு ஸ்டைலில் (சினிமாவில் செய்வதுபோல்) "நான் என்ன(னை)ச்சொன்னேன் என்கிற பாணியில்"அவர்களை அவர்களே தாழ்த்திக்கொண்டு காமடி செய்யட்டுமே.
நீலாம்பரி
No comments:
Post a Comment