Wednesday, July 13, 2011

வேலன்-பைல் பிளண்டர்(File Blender)

Posted by வேலன். on Sunday, July 3, 2011
வேண்டிய பொருளை கொண்டுவாருங்கள்.அருமையான சமையல் ரெடி அதுபோல நீங்கள் எந்த அப்ளிகேஷனையும் கொண்டுவாருங்கள்.வேண்டியவாறு மாற்றி கொடுத்துவிடும்.புகைப்படங்கள்.வீடியோ,பாடல்கள்.பிடிஎப் பைல்கள் என ஒவ்வொன்றையும் வேண்டியவாறு மாற்ற ஒவ்வொரு சாப்ட்வேராக நாம் தேடி ஓட வேண்டும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில நீங்கள் எதை வேண்டுமானாலும் கொடுங்கள் நிமிடத்தில் வேண்டியவாறு மாற்றிக்கொடுத்துவிடும்.11 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நடுவில் கிளிக் செய்தோ-பைலை டிராப் செய்தோ இந்த விண்டோவில் கொண்டுவந்து போடவும்.நான் பிடிஎப் பைலை இதன்மூலம் தேர்வு செய்துள்ளேன்.இதில் பிடிஎப் பைலை பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்கவோ - அல்லது பிரிக்கவோ செய்யலாம்.

பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாக்க இதில் உள்ள Encrypt/Decrypt கிளிக் செய்யவும்.அப்போழுது கீழ்கண்ட விண்டோ ஒப்ப்ன ஆகும். அதில தேவையான பாஸ்வேர்ட் தட்டச்சு செய்து ஓ,கே.கொடுக்கவும்.

மீண்டும் நீங்கள் பைலை திறக்க விரும்பினால் இந்த சாப்ட்வேரில் அதை போட்டு மீண்டும் பாஸ்வேரட் தட்டச்சு செய்தால் தான் பைலை திறக்க முடியும்.
அதைப்போலவே வீடியோ பைலை இதில் உள்ளீடு செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் எது தேவையோ அதை தேர்வு செய்யவும்.

புகைப்படத்தை தேர்வு செய்து இதில் உள்ளீடு செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் புகைப்படத்தை Convert-Invert-Resize-Rotate Left-Rotate Right-Set as Wallpaper- Encrypt/Decrypt என அதுவேண்டுமானாலும் செய்யலாம்.


நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

No comments: