அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்......
இனி ஸ்கூல் வேண்டாம், காலேஜ் வேண்டாம்..................
இது என்ன தலைப்பு?! என்று படித்துக் கொண்டிருக்கிற நீங்கள் ஆச்சரியப்படுவது இயல்புதான்.ஒரு சில உண்மை சூழ்நிலைகளை விழிப்புணர்வுக்காக இப்படி தலைப்பிட்டு எழுதுவது இன்றைய காலத்தின் கட்டாயம்.
ஆம் சகோதரர்களே ! இனிமேல் நமக்கோ அல்லது நமது பிள்ளைகளுக்கோ நர்சரி தேவையில்லை?!, ஸ்கூல் தேவை இல்லை?!, காலேஜ் தேவையில்லை?! யூனிவர்சிடியும் தேவையில்லை?! இவையெல்லாம் தேவையில்லை என்றாகி விட்டால் ஆசிரியர்களுக்கும், ப்ரோபசர்களுக்கும் நமக்கு தேவையிருக்காது. இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது ?இந்த அவசர காலத்தில் தேவையான புத்தகங்களை கிடைக்கும் இடங்களில் வாங்கி, தேவைப்படும் போதும் நேரம் கிடைக்கும் போதும் வீட்டிலேயே படித்து புரிந்து கொள்ளலாம்?! சகோதரர்களே மேலும் இருக்கவே இருக்கிறது இன்டர்நெட் , கம்ப்யூட்டர் இது போன்ற இன்றைய அதிநவீன தொடர்பு சாதனம் மூலமாகவும் நாம் படித்தும் அறிந்தும் நம் அறிவை வளர்த்துக் கொள்ளலாம் பின்னர் இந்த அறிவுக்கு ஏற்றமாதிரி வேலைக்கும் சேர்ந்து கொண்டு பணமும் சம்பாதித்துக் கொள்ளலாம். இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் கால சூழ்நிலைகளில் பணம் சம்பாதிக்க வேண்டும், சந்தோஷத்துடன் வாழ வேண்டும் , செலவழிக்க வேண்டும் அனுபவிக்க வேண்டும் இதை விட்டு விட்டு ஸ்கூல், காலேஜ் , ஆசிரியர் என்றெல்லாம் எதற்கு ? ....... அன்பான சகோதரர்களே ! இப்படி நம்மில் யாராவது நினைக்கவோ அல்லது செயல்படவோ முடியுமா?..... முடியும் என்கிறார்கள் அல்லது எண்ணுகிறார்கள் பெரும்பான்மையான நம் முஸ்லிம் சமுதாய மக்கள் ??? ஆச்சரியமாக இருக்கிறதா ? ஆம் சகோதரர்களே இது தான் இன்றைய உண்மையான நிலவரம்.
இனி விஷயத்திற்கு வருகிறேன்... முடியும் என்று சொல்லுகிற நம் முஸ்லிம் மக்களை நான் காரணத்துடன் இங்கே எதிர்மறையாகவே குறிப்பிட்டு சொல்லியிருக்கிறேன் . அதாவது உலக கல்வி விஷயத்தில் மேலே குறிப்பிட்டிருக்கும் செயல்களை நினைக்கவும் செய்யவும் முடியாது என்று சொல்லுகிறவர்கள் தீன் கல்வி விஷயத்தில் முடியும் என்று சொல்லுகிறார்களே அல்லது நினைத்து செயல்படுகிறார்களே ?! இது மட்டும் எப்படி ?சகோதரர்களே ! தீன் கல்விக்கு செயல்படுகிற மாதிரிதானே உலக கல்விக்கும் செயல்படவேண்டும்?பின் ஏன் நமக்கு இந்த இரட்டை நிலை ? இதற்கு காரணமும் ரொம்ப சிம்பிள். அதாவது உலக கல்வி அறிவுக்காக பெறுகிறோம் என்றாலும், பணமும், அதனால் கிடைக்கக் கூடிய வசதியும், வாய்ப்பும், புகழும் , நிம்மதியும் , சந்தோஷமும் , நமது வாழ்வில் மிகவும் முக்கியமானது என்று மிக சரியாகவே உணர்ந்துள்ளோம் ஆகையால் இதற்காக, இந்த கல்விக்காக நாம் அவரவர் நிதி நிலையை பொறுத்தும் , சில சமயம் வட்டிக்கு பணம் பாங்கிலிருந்து வாங்கியும் என்ன விலை கொடுத்தாவது இந்த உலக கல்வியை பெற்றுக் கொண்டு எதோ ஒரு நிம்மதியில் வாழ்கிறோம். ஆனால் சகோதரர்களே தீன் கல்வி விஷயத்தில் நமக்கு உலக கல்வி விஷயம் போல தீன் கல்வி நமது வாழ்க்கைக்கு அந்த அளவுக்கு மிகவும் முக்கியமானது அல்ல என்பதை பெரும்பாலான முஸ்லிம் எண்ணம் கொண்டுள்ளதால்தானே இந்த தீன் கல்வியில் மக்கள் மிகவும் பின்தங்கியுள்ளார்கள்.
ஒரு உண்மையான முஸ்லிம் அல் குர்ஆனையும், ரசூல் (ஸல்) அவர்களின் வழிமுறையையும் கற்றுதானே ஆகவேண்டும் அப்பொழுதானே வாழ்க்கையில் நாம் இஸ்லாமை பின்பற்ற முடியும் இதில் சந்கேகம் கொள்ளமுடியுமா ? தீன் கல்வி நமது வாழ்க்கைக்கு கண்டிப்பாக தேவை என நாம் உண்மையிலேயே உணர்ந்துள்ளோமா ?அப்படி நாம் உணர்ந்திருந்தால் இந்த தீன் கல்வியை பெறுவதில் இத்தனை அலட்சியம் நம்மில் வருமா ? குர்ஆனை பற்றியும் இதனை முறையாக அறிந்து கொள்ளாமல் இருப்பவர்களை பற்றியும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்ன சொல்கிறான் என்பதை.......................................................................................
இன்ஷா அல்லாஹ் விரைவில் பாகம் 2 ல் பார்ப்போம் "
வஸ்ஸலாம்
சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன்
தக்கலை கவுஸ் முஹம்மது - பஹ்ரைன்
குறைகள் என்னை சாரும் நிறைகள் ஏக இறைவனை சாரும்……………………………….
· பிறப்பால் மட்டுமே முஸ்லிம் என்பதை மாற்றுவோம் !
· குர்ஆன் சுன்னாஹ் அடிப்படையிலான செயல்களால் நாம் முஸ்லிம்கள் என மாறுவோம் !
· படைக்கப்பட்டவர்களை விட்டு, விட்டு படைத்தவனை மட்டுமே வணங்குவோம் !
· குர்ஆனை பொருளுணர்ந்து முறையாக ஓதுவோம் ! அதனை சிந்தித்து செயல்படுவோம்
· அல்லாஹ்வின் கட்டளை - நமது கடமை - நன்மையை ஏவி தீமையை தடுப்போம் !
No comments:
Post a Comment