Thursday, February 26, 2009

தமிழர்களுக்கான பாதுகாப்பு முகாமுக்குள் நேற்றைய தினம் ...

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

விஸ்மடுவில் இலங்கை ராணுவம் அமைத்திருந்த நிராயுதபாணிகளாகிய அப்பாவி
தமிழர்களுக்கான பாதுகாப்பு முகாமுக்குள் நேற்றைய தினம் புலிகளின்
தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்த பெண் மனித வெடிகுண்டு மூலம் தற்கொலை
தாக்குதல் நடத்தி அதில் ஏராளமான அப்பாவி அகதிகள் சம்பவ இடத்திலேயே
உயரிழந்துள்ளனர் ஏராளமான மக்கள் தங்களுடைய உடல் உறுப்புக்களை இழந்து
தவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக அப்பாவி தழிழர்கள் தங்களை புலிகள் பகடைக்காயாகப்
பயன் படுத்துவதை அறிந்து அவர்களிடமிருந்து பல்லாயிரக் கணக்கில் வெளியேறி
ராணுவ முகாம்களுக்குள் அடைக்கலம் புகுந்து வந்தனர்.

இந்தச் செயலைப் பிடிக்காத பயங்கரவாதப் புலிகள் அவர்கள் மீது நடத்திய
மாபாதகச் செயல் தான் மேல்படி ரெத்தத்தை உறையச் செய்யும் பெண் மனித
வெடிகுண்டு சம்பவமாகும்.

தனி தமிழீழம் அமைப்பதாக கூறியதெல்லாம் பிரபாகரன் குறிப்பிட்ட ஒரு
சிலருடைய சுபபோக வாழ்க்கைக்காவே என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். காரணம்
புலிகளுடைய தனி தமிழீழக் கோரிக்கை வைப்பதற்கு முன் இலங்கை தமிழர்கள் எந்த
வகையிலும் இலங்கை அரசால் புறக்கணிக்கப் படவில்லை இரண்டாம் தர மக்களாக
நடத்தப்படவில்லை அரசு உத்தியோகம் முதல், அவர்கள் பேசும் மொழி வரை
முக்கித்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் பிரபாகரனுடன் பதவி வெறிப்பிடித்த சிலர் தனி நாடு கோரிக்கையை
வைத்து பல்லாயிரக் கணக்கான அப்பாவிககளை பலி பீடத்தில் ஏற்றி காவு
கொடுத்தார்கள்.

ஒரு வேலை தமிழீழம் அமைந்தாலும் கூட இவர்களை எதிர்க்கும் அப்பாவிகளை
கூட்டம் கூட்டமாக கொல்வார்கள்.

கொலை வெறி மட்டுமே அவர்களது பிரதான குறிக்கோள் !

தங்களுக்கு எதிராக நடப்பதாக அறிந்தால் அது யாராக இருந்தாலும் விட்டு
வைக்கக் கூடாது என்ற முரட்டு சுபாவம் கொண்டவர்களே பயங்கரவாத புலிகள்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இறுதியாக மனிதனைக் கடித்தக் கதையாக
பிரபல சிங்கள தலைவர்கள் முதல் இந்திய தலைவர்கள் வரை மனித வெடி
குண்டுகளால் சிதறச்செய்த கொலை வெறியர்கள் இறுதியாக ஒட்டிய வயிருடன்,
உடுத்திய ஒரு துண்டுடன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பாதுகாப்பு
முகாம்ககளுக்குள் ஓடி அடைக்கலம் புகுந்த அப்பாவிகள் மீது நடத்திய மனித
வெடிகுண்டுத் தாக்குதலை வண்மையாக கண்டிக்கிறோம்.

மனித இனம் வெட்கித் தலைகுணியும் நாசகாரச் செயலைச் செய்த பயங்கரவாத
புலிகளை கண்டித்து தமிழகத்தில் இதுவரை யாரும் அறிக்கைகள் விடாதது,
ஆர்ப்பாட்டங்கள் நடத்தாது, கடைகள் அடைக்கப்படாதது, தீக் குளிக்காதது,
படகில் ஏறிச்சென்று முல்லைத்தீவில் யுத்தம் செய்யப்போகிறோம் என்று
வழக்கறிஞர்கள் அறிவிக்காதது ஏன் ?

உண்மையிலேயே இதுவரை இவர்கள் நடத்திய போராட்டங்களும், பேரணிகளும்,
தீக்குளிப்புகளும் எதைக் காட்டுகிறது ?

கருனாநிதி, ராமதாஸ், திருமாவளவன் போன்ற அரசியல் வாதிகள் இதை வைத்து
தங்களது கட்சிகளை வலுப்படுத்துகின்றனர் என்பது புரிகிறது !

அவர்களுடைய வரிசையில் இப்பொழுது புதிதாக முஸ்லீம் சமுதாயத்திற்காக ''மனித
நேய மக்கள் கட்சி ''

இவர்களும் கட்சியை வளர்க்கத் தான் பாடுபடுவார்கள் மனித நேயத்திற்கு
பாடுபட மாட்டார்கள் என்பது புரிகிறது. இல்லை என்றால் இலங்கை அரசேப் போரை
நிருத்து என்றப் பிரகடனத்தை முழங்கி இருக்க மாட்டார்கள். மாறாக புலிகளே
ஆயுதத்தைக் கீழேப் போட்டு சரணடைந்து விடு ! என்றப் பிரகடனத்தை முழங்கி
இருப்பார்கள்.

காரணம் மற்ற அனைத்து கட்சிகளையும் விட இலங்கையில் அப்பாவிகள்
கொல்லப்படுவதற்கு மூலகாரணம் யார் என்று இவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
நன்றாகத் தெரிந்திருந்தும் உண்மையைக் கூறாமல் உண்மைக்கு மாறான ஒன்றை
முதன் முதலில் கோரிக்கையாக வைக்கின்றார்கள் என்றால் ? காரணம் என்ன ?

தமிழகத்தின் இன்றைய சூழ்நிலையில் புலிகளை எதிர்த்து அறிக்கை விட்டால்
எடுத்த எடுப்பிலேயே கட்சி கவிழ்ந்து விடும் என்பதால் மற்ற அரசியல்
கட்சிகளைப் போன்றே இவர்களும் இலங்கை அரசேப் போரை நிருத்து என்ற
பல்லவியைப் பாடுகின்றார்கள் .

முதல் கோணல் முற்றும் கோணல், வளைந்துக கொடுக்க நினைப்பவர்களால்
ஒருக்காலும் நிமிர்ந்து நிற்க முடியாது.

தவறான வழியில் பொருளீட்டி கால் நூற்றாண்டுகளுக்கு மேல் அடர்ந்தக்
காடுகளில் கேளிக்கை வாழ்க்கையில் மூழ்கித் திளைத்த பயங்கரவாதப புலிகள்
மேல்படி கேளிக்கை வாழ்க்கையை தொடருவதற்காகவே இன்றளவும் தமிழீழம் என்ற
நடைமுறைக்கு ஒவ்வாத கோரிக்கையை கூறி வருகின்றனர்.

''கல்வி பறிக்கப்படும் வரை பூகம்பங்கள் அதிகமாகும் வரை - காலம்
சுருங்கும் வரை - ழுழப்பங்கள் தோன்றும் வரை - கொலை செய்தல் அதிகமாகும்
வரை- உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை - கியாம நாள் ஏற்படாது.'' என்று
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக நபித் தோழர் அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார்கள். புகாரி 1036.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ
بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ
الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம்
உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்.
3:104

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.... அதிரை ஏ.எம்.பாரூக்
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

No comments: