From: Kaniyur Abdul Rahiman
சர்க்கரை நோய்க்கு அக்குபஞ்சர் சிகிச்சை
By டாக்டர் முத்துகுமார்
First Published : 12 November 2012 03:08 AM IST
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய நாடு பல துறைகளில் முன்னேற்றம் அடைந்தபோதிலும் உடல் நலத்தில் இந்தியர்கள் சரியான முன்னேற்றம் அடைந்துள்ளனரா என்று பார்த்தால் அது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது.
குறிப்பாக இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 56-ல் இருந்து 63 வயதாக உயர்ந்திட்ட போதிலும் என்ன பயன்? காரணம் சக்கரை நோய், இதயநோய், சிறுநீரக நோய், பக்கவாதம் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிப்புக்குள்ளானோர், இன்றைக்கு உள்ள மருந்து வகைகள் மூலம் தங்கள் வாழ்நாள்களை நீட்டித்துக் கொள்ளலாமே ஒழிய பயனுள்ளதாய் வாழ முடியாது. கடந்த 10 ஆண்டுகளில், மற்ற நாடுகளைவிட இந்தியாவில்
சர்க்கரை நோய் அபாயகரமாக அதிகரித்துள்ளதை உலக சுகாதார நிறுவனம் (டபிள்யு.எச்.ஓ.) அறிவித்துள்ளது.மற்ற நோய்களைவிட சர்க்கரை நோய் அதிக தீங்கிழைக்கும் நோயாக இருக்கிறது. பிற நோய்களால் ஒன்று அல்லது இரண்டு உறுப்புகள் மட்டுமே பாதிக்கப்படும்.
ஆனால், சர்க்கரை நோய் என்பது இரத்தத்தில் உள்ள பிரச்னை என்பதால் மூளை, கண், இருதயம், சிறுநீரகம், நரம்பு மண்டலம் என அனைத்தையும் உறுப்புகளையும் பாதிப்பதால் மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக உள்ளது. ஏனெனில் சர்க்கரை நோய் ஏற்பட்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டியுள்ளது.
2020-ம் ஆண்டில் உலகில் உள்ள சர்க்கரை நோயாளிகளில் 5-ல் ஒருவர் இந்தியராக இருப்பர் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சராசரி இந்தியனின் வாழ்க்கை முறைகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டதுதான் இதற்கான காரணம். எல்லாவற்றுக்கும் இயந்திரத்தின் உதவி, உடற்பயிற்சியின்மை, உணவு முறையில் மாற்றம், இரவு கண்விழிப்பு, எதற்கெடுத்தாலும் அவசரம், பரபரப்பு ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
அக்குபஞ்சர் மருத்துவ முறையில் சீனர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தங்களது குறிப்பில் எழுதி வைத்துள்ளனர். அதன்படி நாங்கள் சிகிச்சையளிக்கிறோம். எங்களது மருத்துவமனையில் இதுவரை 1000 - 1500 சர்க்கரை நோயாளிகள் நிவாரணம் பெற்று,மற்றவர்களைப் போலவே எந்த மருந்தோ, உணவுக் கட்டுப்பாடோ இன்றி வாழ்கின்றனர்.
சிகிச்சையின் பலன் என்ன? சர்க்கரை நோயாளிக்கு மாத்திரையின் அளவை சற்று மாற்றியமைத்து, அவர்களது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை 160 மில்லிகிராம் அளவுக்குக் கொண்டு வருவோம். பிறகு,நாள் ஒன்றுக்கு 40 நிமிஷங்கள் சிகிச்சை என 20 நாள்கள் செய்து கொண்டு, மாத்திரைகளை படிப்படியாக குறைத்து ஒரு காலகட்டத்தில் அவற்றை முழுமையாக நிறுத்திவிடலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
From VR Swaminathan
பாரதியின் பொன்மொழிகள்
உன்னை கேட்டா நீ பிறந்தாய் - எந்த விசயதிற்கும் நீ ஏன்
பொறுப்பு வகித்து கொள்கிறாய்
பெண்களின் அன்பிற்கு சாத்தியபடாதது
யாதொன்றுமில்லை
அச்சம் இருக்கும் வரை நீ அறிவாளியாக மாட்டாய்
ஊர் வாயை மூட ஒரு உலை மூடி உண்டு
அதன் பெயர் காலம்
எல்லா அரசியல் வாதிகளும் உண்மையான வாக்குறுதிகளையே
தருகிறார்கள். இல்லாத ஆற்றுக்கு பாலம் கட்டுகிறேன் என்று.
ஆறு வந்தால் கட்டுவார்கள்
நாகரிகம் வேண்டியதில்லை
முதலில் எல்லா மக்களுக்கும் சோறு கண்டுபிடியுங்கள்
காதலிக்க உணர்ச்சி மட்டும் போதும் – கைபிடிக்க
அறிவும், நம்பிக்கையும் வேண்டும் – வைரமுத்து
கூடை கூடையாக பாட்டெழுதி அச்சிட வேண்டும் என்ற
ஒரே ஆவலுடன் இருப்பவன் புலவனாக மாட்டான்
எல்லா மதமும் உண்மையானவை – ஆனால் ஒரு மதமும்
முழுவதும் உண்மையல்ல
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாழ்த்த வயதில்லை தங்கள் பாதம்தொட்டு வணங்குகிறேன் தாயே
இவர் என் கம்பெனி அருகே தினமும் கம்மங்கூல் வியாபாரம் செய்து வருகிறார் விலை அதிகம் இல்லை 5 ரூபாய் தான் அவரிடம் இன்று பேச்சுக்கொடூத்தபோது ஏனம்மா ஊரே பத்துரூபாய்க்கு விற்கிறது நீங்கள் ஏன் விலை ஏற்றவில்லை அதற்க்கு அவர் சொன்ன பதில் என் வாழ்க்கையையே புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்று விட்டது இவர் சரியாக ஒரு நாளைக்கு . ..பத்து கிலோ மீட்டர் தன் சைக்கிளை தள்ளி சென்று வியாபாரம் செய்கிறார் ,மேலும் கம்மங்கூல் கேஸ் அடுப்பில் சமைத்தால் சுவை மாறிவிடும் என்று விறகு அடுப்பில் பாணை வைத்து இவரே தயாரிக்கிறார், இவ்வளவு சிரமபட்டு ஏன் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என கேட்டால் என் உழைப்புக்குண்டான ஊதியம் இப்போதே கிடைக்கிறது அதிக லாபம் எனக்கு தேவை இல்லை என்கிறார் இந்த பாட்டியின் நேர்மை இங்கே கடை விரிக்கும் வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம் தான் நண்பர்களே ...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
From S Swaminathan
முறையீடு
அந்த கருப்பு பயல் துரு துரு வென்று இருப்பவன்.ஒரு இடத்தில் நிற்காமல் அலைபவன். அவனுக்கு என்று ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். அத்தனை பேரும் சாமான்யமானவர்கள் அல்ல. கண் பார்த்ததை கை எடுக்கும்.
இவர்கள் அனைவருக்கும் லீடர் அந்த கருப்பு பயல். ஐந்திலிருந்து எட்டுக்குள் தாண்டாத வயசு அனைவருக்கும். சாதுவாகஇருப்பவனையும் தயார் செய்து விடுவான் அந்த கருப்பு பயல். ஒரு வீடு பாக்கியில்லாமல் அந்த தெரு அதற்கடுத்த தெரு எதிர் தெரு அதன்பின்னால், என்று அந்த சிறிய கிராமத்தின் அனைத்துதெருவுக்கும் செல்வார்கள். எதற்கு? வீட்டில் கொஞ்சம்
அசந்து இருக்கும் சமயம் பார்த்து அந்தந்த வீட்டில் சேமித்து வைத்திருக்கும் வெண்ணையை அபேஸ் செய்ய. ஒரு தடவை இரண்டுதடவை வேண்டுமானால் கோட்டை விட்டு ஏமாறலாம். விழித்து கொண்ட தாய்மார்கள் இந்த பயல்கள் கைக்கு எட்டாமல் உயரே உத்தரத்தில் ஒரு கயிற்றில் உரி கட்டி அதற்குள் வெண்ணை பால் சட்டிகளை வைத்து விடுவார்கள். இந்த கும்பலுக்கு இதால் பெரும் ஏமாற்றம். என்னடா செய்யலாம் என்று யோசித்தார்கள். இருக்கவே இருக்கிறானே தலைவன். அவன் யோசனை கொடுத்தான்.
"எந்த வீட்டில் கொஞ்சம் அசந்து போய் இருக்கிறார்கள் என்று பார்த்து வந்து சொல்லுங்கள்" என்றான் கருப்பு பயல். அன்று இரண்டு வீடு தேறியது. ஆறடி உயரத்தில் வெண்ணை சட்டி உறியிலே தொங்க அந்த வீட்டுக்காரி குள த்துக்கு சென்று இருந்தாள். விடுவார்களா தக்க சமயத்தை. இந்த ஐந்தாறு பயல்களும் அந்த வீட்டில் நுழைந்தனர். லீடர் ஐடியா குடுக்க, ஒருவன் வாசலில் காவல் யாராவதுவருகிறார்களா என்றுபார்க்க. ஒருவன் கையில் ஒரு பாத்திரத்துடன். திருடிய வெண்ணையை சேமிக்க; இரு பெரிய பயல்கள் மண்டியிட்டு குனிந்து நிற்க அனைவரிலும் சிறிய தலைவன் அவர்கள் மேல் ஏறி உயரே இருக்கும் வெண்ணை சட்டியில் கை விட்டு அள்ளி கீழே கொடுக்க பாத்திரக்காரனிடம் அது போய் சேரும். அடுத்த நிமிடம் அனைவரும் ஒதுக்குபுறமாக யமுனை நதியின் கரையோரம் வழக்கமாக சந்திக்கும் பகுதியில் ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு வெண்ணையை பாகப்பிரிவினை செய்வார்கள்.கேட்கவேண்டுமா. பெரும் பங்கு கருப்பு பயலுக்கு தான்.
இது தொடர்ந்து நடப்பதால் அனைத்து கோபியர்களும் அந்த கருப்பு பயல் வீட்டுக்கு வந்தனர். அவன் தாயிடம் முறையிட்டு இந்த கொள்ளையை எப்படியாவது நிறுத்த.
இதோ வந்துவிட்டார்கள் திமு திமு வென்று. அவன் தாய் யசோதைக்கு புரிந்து விட்டது. அனைவரும் வந்தால் அது அந்த பயல் சம்பத்தப்பட்ட ஒரு கம்ப்ளைன்ட் தானே வழக்கம்போல.
அவன் அவர்களை பார்த்த கணத்திலேயே புரிந்து கொண்டான் நண்பர்கள் போட்டு கொடுத்து விட்டார்கள் என்று. ஒன்றுமரியாதவனாக தன தாய் பின்னால் சென்று நின்று கொண்டு அவள் கால்களை கட்டிக்கொண்டு நின்றான்.
"வாருங்கள் என்ன விஷயம்" என்றாள் யசோதை
வந்த கோபியர் யார் முன்னால் விஷயத்தை சொல்வது என்று ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டனர்.அனைவரும் பண்றதை எல்லாம் பண்ணிவிட்டு "ஒன்றும் தெரியாத அப்பாவி" யாக அம்மா பின்னால்ஒளிந்துகொண்டிருக்கும் பயலையும் பார்த்தனர்.
கண்கள் சந்தித்தன. என்ன காந்த சக்தியோ?? பெரிய வட்ட விழிகள். அவை பேசும் மொழியோ ஏராளம். இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்ற வைக்கும் கருவூலம் - அந்த கடலினும் பெரிய கண்கள். மெதுவாக தலையைஆட்டிக்கொண்டே அந்த விழிகள் அம்மாவின் பின்னால் ஒளிந்து கொண்டே பேசின " ப்ளீஸ் சொல்லாதே, சொல்லாதே" என்று.
"என்னவிஷயம் சொல்லுங்கள் ஏன் எல்லாரும் பேசாமலேயே நிற்கிறீர்கள்? அமருங்கள்"
என்றாள் யசோதை."ஒன்று மில்லையம்மா. நாம் அடிக்கடி சந்திக்க முடியாமல் வேலை இருக்கிறதே. அதான் எல்லாரும்ஒன்று சேர்ந்துஉன்னை பார்த்து விட்டு போவோம் என்று வந்தோம்."
அந்த விழிகள் செய்த மாயம் அல்லவா இது?
"பார்வை ஒன்றே போதுமே!!!!"-ஊத்துக்காடு வேங்கட மகி!!!
பாலை காய்ச்சி அது ஆறினவுடன் சிறிது தயிரோ மோரோ கலந்தவுடன் அது தெளிந்து இறுகி அசைவற்று தயிராகிறது. தயிரை கடைந்தபின் அது வெண்ணை. இது உபமானம். கொந்தளிக்கும் மனதை கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சிகளி னின்றும் ஆறவைத்து, அதில் தன்னலமற்ற எண்ணம் புகுத்தி
நிலை நிறுத்தினால் மனம் உறுதிபடுகிறது. மனதை நன்றாக அலசி கடைந்து தேவையற்றதை (ஆசை, மோகம், குரோதம் லோபம்,மாற்சர்யம்) நீக்கினால் பெறுவது நிர்மலமான தன்னலமற்ற
தூய்மையான மனம். அதுவே இறைவன் ஆசையாக தேடும் வெண்ணை.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Subject: maha periyava- கண்டிஷன் போட்டார்
Jaya Jaya Sankara
Hara Hara Sankara
அபாரமான சாஸ்த்ர புலமை பெற்ற ஒரு வீர சூர வைஷ்ணவர் இருந்த ஊருக்கு பெரியவா சென்றிருந்தார். ஊரே திரண்டு வந்து பெரியவாளை தர்சனம் பண்ணியபோதும் அந்த வைஷ்ணவர் பெரியவா இருந்த திசைப்பக்கம் கூட வரவில்லை. அவரைப் பொறுத்தவரை "சித்தாந்தத்தில் அத்வைதத்தையும், தோற்றத்தில் சைவக் கோலத்தையும் கொண்ட ஏகதண்ட சன்யாசியை பார்ப்பதே தோஷம்". பெரியவாளின் கருணை, சர்வஞ்யத்வம், பாண்டித்யம் பற்றி அத்தனை பேருமே ஏகோபித்த சந்தோஷமும், பாராட்டுமே கொண்டதை அந்த வைஷ்ணவர் கண்டார்.
>
> "கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்ற வசனப்படி, அந்த வைஷ்ணவரை அழைத்து வரச்சொல்லி மடத்திலிருந்து ஒரு வித்வானை முறைப்படி அனுப்பினார் பெரியவா. "வர மாட்டேன்" என்று சொல்ல முடியாமல் பெரியவாளுடைய அன்பான அழைப்பு தடுத்தது.
>
> "கூப்ட்டு அனுப்பிச்சிருக்கார்.....மாட்டேன்னு சொல்லப்டாதுதான்! ஆனா, நேக்குன்னு செல ப்ரதிக்ஞை இருக்கு. அதை மீறரதுக்கில்லே; அது ஒங்களுக்கும், ஒங்க பெரியவாளுக்கும் சம்மதப்படாம இருக்கலாம்....அதான் யோஜனையா இருக்கு"....
>
> "என்ன ப்ரதிக்ஞை..ன்னு சொன்னேள்..னா பெரியவாட்ட சொல்றோம்"
>
> "மொதல்ல, பெரியவாளை பாத்தா, நான் நமஸ்காரம் பண்ணமாட்டேன்;
>
> ரெண்டாவது, அவா எதாவுது ப்ரஸாதம் குடுத்தா அதை ஏத்துக்க மாட்டேன்;
>
> மூணாவுது வித்வத் சம்பாவனை ன்னு சொல்லிட்டு, எதாவுது சால்வை அது இதுன்னு பண்ணினா, அதை அங்கீகரிச்சுக்க மாட்டேன்"
>
> "சரிதான்! இவரை எதுக்கு மரியாதை பண்ணி அழைச்சிண்டு போகணும்?" என்று அந்த நல்ல வித்வானுக்குக் கூட மனஸில் தோன்றியது. பெரியவாளிடம் சென்று, "ஒண்ணும் ஸ்வாரஸ்யப்படலை; அவர் ரொம்ப நிர்தாக்ஷிண்யமா கண்டிஷன் போடறார் பெரியவா" என்றார்.
>
> "அப்டியா! ரொம்ப ஸ்வாரஸ்யமான்னா இருக்கு! நல்ல சேதின்னா கொண்டு வந்திருக்கே!" வித்வானுக்கு புரியவில்லை.
>
> "கண்டிஷன் போடறார்..ன்னு சொன்னதுலேர்ந்தே அவர் முடிஞ்ச முடிவா "வர மாட்டேன்"ன்னு சொல்லலியோன்னோ? கண்டிஷனுக்கு ஒத்துண்டா, வரேங்கறார். அந்த மட்டுல நல்ல சேதிதானே?"
>
> வித்வான் ரொம்ப நொந்த உள்ளத்தோடு அவர் போட்ட கண்டிஷன்களை சொன்னார்.
>
> "அவ்ளோவ்தானே! அவர் இஷ்டப்ரஹாரம் இருந்துட்டுப் போகட்டுமே! அவருக்கு முடியாதப்போ, கண்டிஷன் போட�
No comments:
Post a Comment