Saturday, December 1, 2012

தக்காளியை சாப்பிட்டு தக்காளி மாதிரி வரலாமே...

காய்கறிகளில் மிகவும் எளிதிலும், விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன. முதலாவது, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம்.

இது பழத்துக்குப் புளிப்புத் தன்மை தருகிறது. இரண்டாவது எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, நாரத்தை முதலியவற்றில் இருக்கும் ‘சிட்ரிக்’ அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக் கூடியது. மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலம். இது நரம்பு நாடி, நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது.

சாப்பாட்டில் அரிசி அதிகமாக இருப்பதால் உடம்புக்கு நோய் தான் ஏற்படும். தக்காளி உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று, அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது. பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.

தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது. அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது. மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.

இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவையும் இருக்கின்றன. தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறதுவைட்டமின் ‘சி’ குறைவு காரணமாக உடலில் அங்கங்கே வீக்கம் ஏற்படும்.

சக்தியும் குறையும், பல்லும் ஈறும் பலவீனப்படும். உடம்பு வளராமல் குள்ளமாகவே மனிதன் நின்றுவிடுவான். இதையெல்லாம் போக்கக் கூடிய வைட்டமின் ‘சி’ தக்காளியில் அதிக அளவில் கிடைக்கிறது.


வசம்பின் மருத்துவக் குணங்கள்...


இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.


இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

# சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

# வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

# இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

# கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

# பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது…!


S.HAMEEDHONGKONG
MOB NO:(852) 9754 5907
hameedameer67@yahoo.com.hk

No comments: