Wednesday, October 19, 2011

இலவசமாக M.E /M.Tech படிக்க GATE நுழைவு தேர்வு

GATE- என்ற நுழைவு தேர்வு இந்தியாவில் உள்ள IIT, NIT, அண்ணா பல்கலை கழகம் போன்ற மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் M.E/M.Techபடிக்க மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வாகும். இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது. இந்த உதவி தொகை மூலம் படிப்பை இலவசமாக படிப்பது மட்டும் இல்லாமல் நமது சிறிய தேவைகளையும் (ஹாஸ்டல், உணவு, புத்தகம்) நிறைவேற்றிகொள்ளலாம். இதில் முஸ்லீம்களையும் சேர்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடும் உள்ளது. தேர்வை பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உயர்ந்த தொழில் நுட்ப நிறுவனக்களான IIT, NIT, டெல்லி பல்கலை கழகம் போன்ற மத்திய பல்கலை கழகங்கள், இதர அரசு பல்கலை கழகங்கள், நிகர் நிலை பல்கலை கழகங்கள், மற்றும் இதர தனியார் உயர் கல்வி நிறுவங்களில் M.E/M.Tech, Phd படிக்க GATE என்ற நுழைவு தேர்வை மத்திய அரசு நடத்துகின்றது, இதில் நாம் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுப்பதின் மூலம் இந்தியாவின் மிக உயர்ந்த கல்வி நிறுவனங்களில் பணத்தை வாங்கிகொண்டு M.E/M.Tech/Phd படிக்க முடியும் (கல்லூரிக்கேற்ப அரசு மாதம் ரூ.5,000 முதல் ரூ.9,000 வரை வழங்குகின்றது). இந்த கல்வி உதவி தொகையை வாங்குவது மிகவும் எளிது. நீங்கள் குறிப்பிடும் வங்கி கணக்கு எண்ணுக்கு மாதமாதம் பணம் வந்து சேர்ந்துவிடும். இது மட்டும் இல்லை இந்த உயர்கல்வி நிறுவங்களில் கல்வி தரம் உயர்ந்ததாக இருக்கும் , இங்கு படிப்பவர்களுக்கு வளாக தேர்வு (campus interview) மூலம் மிக எளிதில் வேலைகிடைகின்றது. இறுதி ஆண்டு படிக்கும் போதே அதிக சம்பளத்தில் படித்ததற்க்கு ஏற்ப நல்ல வேலைகிடைக்கின்றது. மாதம் இலட்சங்களை வாங்கிகொண்டு வெளி நாட்டில் Phd படிக்க வாய்ப்புகளும் கிடைக்கின்றன

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு, காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எந்த தேர்வுகள் கடினமில்லை. தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? என்ற கட்டுரை நமது www.tntj.net இணையதளத்தில் உள்ளது.

GATE நுழைவு தேர்வை பற்றிய விபரம்

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 17

விண்ணப்பங்கள் ஆன்லைனில் கிடைக்கும்: http://www.iitk.ac.in/gate/gate2012/gateonline.php

விண்ணப்பத்தின் விலை : ரூ.1,000


தேர்வு எழுத தகுதியான மாணவர்கள் :

1. B.E/B.Tech எல்ல பொறியியல் படிப்புகள் படித்து முடித்தவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள்.

2. AMIE மூலம் பொறியியல் படித்தவர்கள்

3. M.Sc கணிதம்/ புள்ளியியல்/ அறிவியல்( இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் etc…) மற்றும் MCA படித்தவர்கள்

தேர்வு நடைபெறும் தேதி : ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி 12,

தேர்வு முடிவுகள் வெளிவரும் தேதி : மார்ச் 15.

இந்த தேர்வை பற்றிய விபரங்கள் http://www.iitk.ac.in/gate/gate2012/index.php மேலும் அறிய sithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்

-S.சி்த்தீக்.M.Tech
__._,_.___

No comments: