Wednesday, October 19, 2011

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நூலில் கோர்க்கப்பட்ட மணிமாலை அறுந்து ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக விழுவதுபோல்,...

"போர்க்களத்தில் கிடைக்கும் ஙனீமத் பொருளைத் தனது செல்வமாகக் கரதப்படுமானால்,

அமானிதமாக வைக்கப்பட்ட பொருளை ஙனீமத் பொருளாக எண்ணப்படுமானால்,

தன்னிடம் பாதுகாப்பதற்காகக் கொடுத்து வைக்கப்பட்ட அமானிதத்தை உரியவரிடம் ஒப்படைக்காமல் தான் உபகோப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்படுமானால்,

ஸகாத்தை வரியாக கருதப்படுமானால்,

தீனுக்காக இல்லாமல் உலக ஆதாயத்துக்காகக் கல்வி கற்கப்படுமானால்,

ஒருவர் தன் மனைவிக்கு வழிபட்டு தாய்க்கு மாறு செய்யத் துவங்கினால்,

தன் நண்பனை நெருக்கமானவனாகவும் தந்தையை தனக்குத் தூரமாகவும் கருதுவானேயானால்,

மஸ்ஜித்களில் பகிரங்கமாகக் கூச்சல் போடப்படுமானால்,

பெரும்பாவி ஒரு சமுதாயத்தினருக்குத் தலைவனாக ஆக்கப்படுவானேயானால்,

ஒரு கூட்டத்தினரின் நிர்வாகப் பொறுப்பு மிகக் கேவலமானவனிடம் ஒப்படைக்கப்படுமேயானால்,

ஒருவனின் கெடுதியை விட்டும் தப்பிப்பதற்காக அவனுக்கு கண்ணியமளிக்கப்படுமேயானால்,

மது அருந்துவது சர்வ சாதாரணமாக ஆகிவிடுமேயானால்,

சமுதாயத்தின் முன்னோர்களை பின்னோர்கள் தூற்றுவார்களேயானால்,

செந்நிறக்காற்று, பூமியதிர்ச்சி, பூமியில் புதையுண்டு போதல், மனிதர்களின் முகங்கள் உருமாற்றப்படுதல், வானத்திலிருந்து கல்மாரிப் பொழிதல் ஆகிய வேதனைகளை எதிர்பார்த்திருங்கள்.

அதே போல் நூலில் கோர்க்கப்பட்ட மணிமாலை அறுந்துவிட்டால் ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக விழுவதுபோல், தொடர்ச்சியான வேதனைகள் வருவதையும் எதிர்பார்த்திருங்கள்.’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள், நூல்: திர்மிதீ)

எந்த சமுதாயத்தில் ஙனீமதட பொருளில் பகிரங்கமான மோசடி நடைபெறுமோ, அவர்களின் உள்ளங்களில் எதிரியைப் பற்றிய திடுக்கம் போடப்படும்.

விபச்சாரம் எந்த சமுதாயத்தில் பொதுவாகப் போய்விடுமோ, அவர்களில் மரணம் அதிகரித்துவிடும்.

எந்தச்சமுதாயம் அளவை, நிறுவையில் குறைவு செய்யுமோ, அவர்களுடைய உணவு எடுக்கப்பட்டுவிடும். அச்சமுதாயத்தினரின் தேவைகள் நிறைவேறாமல் போய்விடும்.

தீர்ப்பு வழங்குவதில் எந்தச் சமுதாயம் அநியாயம் செய்யுமோ, அவர்களில் ரத்தம் ஓட்டுவது அதிகரித்துவிடும்.

எந்தச்சமுதாயம் ஒப்பந்தத்தை மீறுமோ, அவர்களின்மீது எதிரிகள் சாட்டப்படுவர்.’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, அவர்கள், நூல்: முஅத்தா)


அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்:

"முஸ்லிம்களின் கூட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பானவர், ஒருவரை தன் உறவினர் அல்லது நண்பர் என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே முஸ்லிம்கள் மீது அதிகாரியாக நியமித்து விடுவாராயின், அவர் மீது அல்லாஹ்வின் சாபம் இறங்கும். மறுமைநாளில் அவன் தரப்பிலிருந்து எந்தவித மீட்புப்பணம் கொடுக்கப்பட்டாலும் அல்லாஹ் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டான். இறுதியில் அவனை நரகத்தில் வீசியெறிவான்!'' (அறிவிப்பாளர்: யஸீத் பின் அபீஸுயான் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: கிதாபுல் கராஜ், இமாம் அபூ யூஸுஃப் ரஹ்மதுல்லாஹி அலைஹி)

No comments: