சலாம்,
ஊழல் ஒழிய என்ன செய்ய !
சனாதிபதி முதல் அரசின் அடிமட்ட அரசின் அடிமட்ட அடிமை (ஊழியன் ) வரை சில உறுதிமொழி களை தினசரி
நான்கு முறையாவது இறைவன்மீது ஆணையிட்டு எடுக்க வேண்டும்.
௧. நான் ஒரு அரசு ஊழியன். மக்களுக்கு ஊழியம் செய்வதற்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளேன்.நான் இன்று லஞ்சமாக
எதுவும் வாங்க மாட்டேன். மீறி வாங்கினால் அது எனது தாயை புனர்வதுக்கு (மன்னிக்கவும் இ ந்த வார்த்தைகளை
உபயோகப்டுத்துவதற்கு) சமமாக கருதுவேன்.எனது குழந்தைகளை கூட்டி கொடுப்பதற்கு சமமாக கருதுவேன்.
என் மனைவியை விற்பதற்கு சமமாக கருதுவேன்.
௨. நான் எனக்கு உரிய பதவிகளை மக்களுக்கு பயன்படும் விதத்தில் இன்று முழுவதும் செலவழித்தேன். இதை நான்
உளப்பூர்வமாக உறுதி அளிக்கிறேன் .
௩. எனது குடும்பத்துக்கு தேவைப்படும் செலவுகளை நான் எப்பொழுதும் ஹலாலான முறையிலேயே சம்பாதிப்பேன்
௪. எனக்கு ஒதுக்கப்பட்ட பணியை எனது அதிகபட்ச உழைப்பில் இன்று முழுவதும் களித்தேன் .வீண் வேளைகளில்
நான் ஈடுபடவில்லை.
௫. நான் மக்களின் அடிமை ஊழியன் என்றும் அவர்களின் மற்றும் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக எனது உழைப்பை
இன்று முழுவதும் செலவழிப்பேன் என்றும் ஊறுதி அளிக்கிறேன்.
இதைப்போல சொல்லுவதற்கு கூசும் வார்த்தைகளை உபயோகப்படுத்தி அனைவர்களையும் உறுதிமொழி எடுக்க செய்ய வேண்டும்.
மக்களைப்போருத்தவரை அவர்களை குறை கூறி பயன் இல்லை. காரணம் லஞ்சம் கொடுப்பதை தவிர வேறு வலி இல்லை . நான் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல.அல்லாஹ் மன்னிக்க வேண்டும்.
லஞ்சமாக கொடுக்கும் பணம் அரசு கஜானாவில் சேர்ந்தால் தினசரி 100 கோடிக்கு மேல் வருமானம் வரும்.
நேர்மையுள்ளவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும்.
அல்லாஹ் போதுமானவன்.
முஸ்தபா
No comments:
Post a Comment