முந்திய வேதங்களில் மாநபி (ஸல்)
October 2, 2009
- பன்னூலாசிரியர் K.E.S.சுல்தான் சாஹிபு
ஏதஸ் மின்னந் தாரா மிலேச்ச
ஆச்சார்யண ஸமின் வித
மஹாமத் இதிக்கியாத
சிஷ்ய சாகா ஸமன்வித
நிருஷ் சேவ ஹமாதே
மருஸ் தல நிவாஸினம்
- பவிஷ்ய புராணம், பாகம் 3, சுலோகம் 3, சூத்திரம் 5-8
தமிழில் : ஒரு அன்னிய நாட்டில் ஓர் ஆன்மீக சீர்த்திருத்தவாதி, தமது சிஹ்யர்களுடன் வருவார். அவர் பெயர் மஹாமத். அவர் பாலைவனத்தைச் சார்ந்தவராக இருப்பார்
லிங்கச்சேதி சிகா ஹுன
சுமக்சுறு தாரி ஸாதூஷக
உச்சாலாபி ஸாவ பஹீ
பவிஷ்யதி ஜனோமம
முஸலை நைஸ் மஸ்கார
- பவிஷ்ய புராணம், பாகம் 3, சுலோகம் 25, சூத்திரம் 3
தமிழில் : அவர்கள் லிங்கச்சேதம் (சுன்னத்) செய்வார்கள். தலையில் குடுமி இருக்காது. தாடி வைத்திருப்பார்கள். சப்தமிட்டு அழைப்பார்கள் (பாங்கு). முஸ்லிம் என்று அறியப்படுவார்கள்.
அனஸ வந்தா ஸக் பதிர் மாமஹே
மேகாவா சேதிஷ் ஷடோ
அஸுரோ பகோண
நிறை விஷேனோ அக்னேத சாப்பி
ஸஹஸ்னரர் வைச்சுவாரை
திறையும் ருனா ஹீசிகேத
- ரிக்வேத மந்திரம் 5, ஞ்க்தம் 28
தமிழில் : உண்மையாளரும், அறிவாளியும், பலசாலியுமான மாமஹே எனக்கு அருள் புரிவார். அவர் முழிமையானவர். முழு உலகிற்கும் அருட்கொடையானவர். பத்தாயிரம் பேர்களுடன் புகழ் பெற்றவர்.
அல்லோ ஜியேஸ்டம் பரமம் பூர்ணம் பிரஷ்மாண்டம் அல்லாம்
அல்லோ அல்லாம் ஆதல்லா பூக மேகம் அல்லா பூகணி வாதகம்
அல்லா பஞ்ஞென ஹுதா ஹிறுத்தவா
அல்லா சூரிய சந்திர ஸர்வ திவ்வியாம இந்திராய
பூர்வம் மாயா பரமந்த ரிஷா
அல்லா பித்ததிவ்விய அந்தரிஷம் விசுவரூபம்
இல்லாம் கபர இல்லாம் இல்லல்தீ இல்லல்லா
ஓம் அல்லா இல்லல்லா அனாகிஸ் வரூபா
அத்தர் வணா சியாமா ஹும் ஹிரிம் ஜனான பகன
ஸித்தான ஜலசாரன் அதிர்டம்
குருகுரு புடஸபரஸட ஸமஹாரனீ
ஹூம் ஹிரீம் அல்லா ரசூல மஹமத சுபரஸ்
அல்லா அல்லா இல்லல்லலேதி இல்லல்லா
- அல்லோப நிஷத் (அதர்வன வேதம்) 1:10
தமிழில் : அல்லா முழுமையானவர், எல்லா பிரபஞ்சமுமவனுடையது. சிவனின் ஸ்தானத்தை அல்ங்கரிக்கும் மஹாமத் அல்லாவுடைய தூதராய் இருக்கின்றார். அல்லா எல்லாஎல்லா பூமியையும் இயக்குகின்ற இறைவன். பூமியின் பரிபாலனும் அவனே! இறவன் ஒருவனேயன்றி வேறு இல்லை. அரூபியான இறைவனின் ஓங்கார நாதத்தைப் பாருங்கள். ஓம் ஹரீம் மந்திரங்கள் அடங்கிய அதர்வண வேதத்தை இறக்கிய இறைவனே மக்களையும், பசுக்களையும் ஏனைய எல்லாவற்றையும் படைத்தான். அரூபியான அந்த ஆண்டவனையே துதி செய்யுங்கள்.
ஓம் ஹிர்ரீம் மந்திரம் மூலம் அசுர வர்க்கத்தை அழிக்கும் மஹாமத் அல்லவுடைய தூதர் ஏக இறைவனைத் தவிர வேறு த்ய்வமில்லை. உன் தேவனாகிய கர்த்தர் உன் சனத்தினின்றும், உன் சகோதரர்களிடத்தினின்றும் என்னைப் போல் ஓர் தீர்க்கதரிசியை உனக்காக ஏற்படுத்துவார். அவருக்குச் செவி கொடுப்பாயாக.
- உபாகமம் 18, அதிகாரம், வசனம் 15
உன்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை நாம் அவர்களுக்காக அவர்களுடைய சகோதரர்களின் நடுவிலிருந்து எழுப்பம் பண்ணி நம் வார்த்தைகளை அவருடைய வாயில் வைத்தருள்வோம். நாம் அவருக்கு கற்பிப்பதை அவர்களுக்குச் சொல்லுவார். நமது பெயரால் அவர் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவி கொடாதவன் எவனோ அவனை நாம் தண்டிப்போம்.
- உபாகம் 18, அதிகாரம்18, வசனம் 1
No comments:
Post a Comment