இளைஞர்கள் தங்கள் உயிரின் மதிப்பை உணர்ந்துக்கொள்ள வேண்டும்
-டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி!!!
ஜன.24:துனீசியாவில் முஹம்மது பொவைஸி என்ற இளைஞரின் தற்கொலையால் மக்கள் புரட்சி ஏற்பட்டு அந்நாட்டின் சர்வாதிகாரி பின் அலி நாட்டைவிட்டு வெளியேறினார்.
இந்நிலையில் துனீசியாவை பின்பற்றி எகிப்து, அல்ஜீரியா, மவுரிடானியா ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பின்மை மற்றும் பட்டினி காரணமாக இளைஞர்கள் தற்கொலை முயற்சியை மேற்கொண்டனர்.
இந்நிலையில் தங்களது உயிரை தாமே பறித்துக்கொள்வது இஸ்லாத்திற்கு விரோதமானது என்பதை அறிவுத்தும்விதமாக சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரான பிரபல சிந்தனையாளர் டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி விடுத்துள்ள அறிக்கையில், முஸ்லிம் அரபு இளைஞர்கள் தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். தீக்குளித்து தற்கொலைச் செய்வது நீங்கள் செய்யவேண்டிய வேலை அல்ல.
எகிப்து, அல்ஜீரியா, மவுரிடானியா போன்ற நாடுகளில் முஸ்லிம் இளைஞர்கள் தங்களை தாங்களே தீவைத்துக் கொளுத்துவது வெறுப்பை ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தை பற்றிய கவனக் குறைவுதான் இதற்கு காரணம்.
அல்லாஹ்வின் அருளில் எவரும் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது.
"அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்".(திருக்குர்ஆன் 12:87)
ஆதலால் ஒவ்வொரு கஷ்டத்திற்கு பிறகு நிச்சயமாக நிம்மதி கிடைக்கும். இரவுக்கு பின்னர்தான் விடியலே ஏற்படுகிறது. இவ்விஷயத்தில் நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்.
எனதருமை இளைஞர்களே உங்கள் உயிர்களைக் குறித்து கவனமாக இருந்துக் கொள்ளுங்கள். அது அல்லாஹ்வின் மிகப்பெரும் எல்லை. உங்களை நீங்களே தீவைத்துக் கொளுத்தாதீர்கள். நீங்கள் பொறுமையாக இருங்கள், சகித்துக் கொள்ளுங்கள், நிலை குலையாமல் இருங்கள். நாளை விரைவில் வரும். இஸ்லாம் அடக்குமுறைக்கும், கொடுங்கோன்மைக்கும் எதிராக போராட கூறுகிறது. அதற்கு தற்கொலை தேவையில்லை. இவ்வாறு கர்தாவி கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------------இடுகையிட்டது பாலைவனத் தூது-------------------------------------------------------------------------------------------------------
No comments:
Post a Comment