Thursday, June 3, 2010

தமிழக காவல் துறையே பொய் வழக்கு போடாதே!!

தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் கடந்த சில மாதங்களாக மின்சாரம் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் என்ற அளவில் மின்சாரம்
நிறுத்தப்படுகிறது..


மின்வாரிய அதிகாரிகளிடம் இதுபற்றி பல முறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்றைய தினம் ஊர் பொது மக்கள் ஒன்றுக் கூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் களைந்து செல்லுங்கள்..இல்லை என்றால் தடியடி நடத்தப்படும் என்று எச்சரித்தது மட்டும் இல்லாமல் மின்சாரம் வராது. அப்படிதான் நிறுத்துவோம் உங்களால் என்ன செய்ய முடியும் என்ற அதிகார தோரணையில் எச்சரிக்க
மறியலில் ஈடுப்பட்டவர்களுக்கும், காவல்துறையினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது...

இதனை தொடர்ந்து ராஜகிரி கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் 20 பேர் மீது காவல் துறை மீது பொய் வழக்கு போட்டு உள்ளது.

நமிதாவும், குஷ்பூவும் பங்கேற்கும் கேளிக்கை விழாக்களுக்கு கோடிகளை செலவழிக்கும் தமிழக அரசே!

அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை கேட்டால்
கேட்டால் பொய் வழக்கா
?

-- rajaghirinews

No comments: