Saturday, May 2, 2009
மேலான்மை திங்கள் 27, ஏப்ரல் 2009
சீனநாட்டு சிந்தனையாளரான கன்பூஸியஸின் சிந்தனைகளில் ஒன்று தான் மேலான்மை. அதைப் பற்றி ஒரு சிறுகதை… நாட்டை ஆள்வதற்கு தகுதி உள்ளவனாக ஆக ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்று சூசாங் கேட்டார். அதற்கு கன்பூஸியஸ் அவன் தன்னிடமுள்ள ஐந்து அருமையான விஷயங்களில் கவனம் செலுத்தி, நான்கு அசிங்கமான விஷயங்களை ஒதுக்கிட வேண்டும் என்று பதில் சொன்னார்.
ஐந்து அருமையான விஷயங்கள்:
· ஒரு கனவான் ஆடம்பரமின்றி பணிவோடு இருக்க வேண்டும்.
· பிறரை வருத்தாமல் அவர்களிடம் வேலை வாங்க வேண்டும்.
· ஆசை இருக்கலாம் பேராசைப் படக்கூடாது.
· பெருமைப் படலாம், கர்வம் கூடாது.
· கவரும் விதமாக நடந்து கொள்ளலாம், முரடனாக இருக்கக்கூடாது.
நான்கு அசிங்கமான விஷயங்கள்:
· ஒருவனை சாகடிப்பது காட்டுமிராண்டித்தனம்.
· போதிய அவகாசம் தராமல் வேலைகளை முடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது காட்டுமிராண்டித்தனம்.
· என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுவது, தெளிவாக இல்லாமல் அவ்வேலை சுத்தமாக நடைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது கொடிய செயல்.
· ஒருவனுக்கு கொடுக்க விரும்புவது போலக் கூறி அதைக் கொடுக்காமல் இருப்பது அற்பத்தனம்.
"நாம் நினைப்பதைப் போல மற்றவர்கள் நடந்து கொள்ளவில்லை என்பதற்காகக்
கோபப்பட வேண்டாம். சிலசமயங்களில் நாம் நினைப்பதைப் போல,
நம்மாலையே நடந்து கொள்ள முடிவதில்லையே".
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment