Thursday, January 21, 2010

தீர்ப்பை மாற்றி எழுதிய சீன நாட்டாமை அரசு

தீர்ப்பை மாற்றி எழுதிய சீன நாட்டாமை அரசு


ஜனவரி 20, 2010
பீஜீங் : பதவியில் இருந்தபோது நிர்வாகப்பணத்தை முறைகேடாக கையாடல் செய்த நீதிபதிக்கு, சீன கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் சட்ட விரோத செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர் மீது உரிய நடவடிக்கை இருக்கும் என்பதையே இந்த தீர்ப்பு வெளிக்காட்டியுள்ளது. கம்யூனிச சீன வரலாற்றில் ஒரு நீதிபதி லஞ்ச குற்றத்திற்கு தண்டிக்கப்படுவது இதுவே முதல்முறை. பொதுவாக சீனாவில் அதிகாரிகள், அலுவலர்கள் மீதான குற்றம் என்றால் சீன அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். எனவே நீதிபதி கையாடல் செய்த விவகாரத்தில் சட்டத்துறை கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.


கையாடல் செய்ததது எவ்வளவு?

சீனா சுப்ரீம் கோர்ட்டில் துணை தலைவராக ( துணை நீதிபதி ) இருந்தவர் ஹூவாங்சுவாங்கியூ வயது ( 52 ). இவர் 2005 முதல் 2008 வரை பதவியில் இருந்த காலத்தில் நீதிமன்ற நிர்வாக பணத்தை கையாடல் செய்துள்ளார். இவர் கையாடல் செய்த தொகை 3. 9 மில்லியன் யுவான் ( 574 000 டாலர் ) (இந்திய மதிப்பில் : 2 கோடியே 58 லட்சத்து 30 ஆயிரம்) . இது கண்டுபிடிக்கப்பட்டு இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பதவியில் இருந்தபடி வழக்கு நடத்தப்பட்டால் நேர்மையான நீதி கிடைக்காது என சீன சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்ததனர். இதன் அடிப்படையில் இந்த குற்றம் தொடர்பாக அவர் பதவியில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.


சொத்துக்களையும் பறிமுதல் செய்க:

இது தொடர்பான வழக்கு ஹெபய் மாகாணத்தில் உள்ள லாங்பாங் நகரில் உள்ள இன்டர்மீடியேட் கோர்ட்டில் விசாரணை நடந்தது. வழக்கில் அவர் தனது குற்றத்தை ஒப்புதல் வாக்கு மூலத்தில் உண்மை நிலையையும் தவறையும் ஒத்துக்கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில் ஹூவாங்சுவாங்கியூ இனி அரசியல் வாழ்க்கையில் ஈடுபடும் உரிமையை பறிப்பதுடன் இவரது சொத்தையும் பறிக்க உத்தரவு பிறப்பித்தார். இவரது குற்றம் நிரூபணம் செய்யப்பட்டதால் இவருக்கு ஆயுள் தண்டனையும் விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.



============================

இது போன்ற குற்ற வழக்குகளில் இந்திய நீதிமன்றங்கள் இது போன்ற துணிச்சல் தீர்ப்பை எடுத்தல் வேண்டும்

No comments: