அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் திருப்பெயரால்...
தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?-பாகம்-2
.............
தேர்வு எழுதும் முன்
தேர்விற்க்கு முன்னதாக நாம் பாடங்களை படிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளை பார்ப்போம்
1. படிக்கும் முறை : பொதுவாக நாம் தேர்விற்க்காக படிக்கும் போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்க்காது, படிக்கும் போது வெள்ளை தாள், பேனா அல்லது பென்சில் வைத்து கொண்டு, படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதி பார்க்க வேண்டும், ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்கு போகாமல் இதுவரை படித்ததை கண்டிப்பாக பார்க்காமல் எழுதி பார்க்க வேண்டும், இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.
2. திட்டமிடுதல் : எந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. தேர்வுக்கு படிப்பதற்க்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும் (Time table- போட்டு படிக்க வேண்டும்). ஒரு நாளில் குறைந்தது 12 மணி நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும். இதில் நாம் 10 மணி நேரத்திற்க்கு தான் படிபதற்க்காக செலவு செய்ய வேண்டும். மீதமுள்ள இரண்டு மணி நேரத்தில் படித்ததை மீண்டும் நினைவில் நிருத்த செலவலிக்க (Revise பன்ன) வேண்டும். அதே போல் நாம் படிக்கும் ஒவ்வொறு மணி நேரத்திலும் 10 நிமிடங்களை படித்ததை நினைவில் நிருத்த (Revise பன்ன) செலவு செய்ய வேண்டும்.
3. சுயபரிசோதனை (Check list) : ஒரு நாளில் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்ட மிட்ட பிறகு, தினமும் நாம் தூங்க போகும் முன் இன்று நாம் திட்ட மிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என சுய பரிசோதனை செய்ய (Check - பன்ன) வேண்டும். இதை தினமும் செய்தால் தான் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு படித்துள்ளோம் இன்னும் எவ்வளவு படிக்க வேண்டி உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். திட்டமிடும் போது (Time table- போடும் போது) வாரத்தில் 6 நாள்களுக்குதான் நாம் படிப்பதற்க்கு திட்ட மிட வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் அந்த வாரத்தில் நாம் படிக்காமல் விட்ட பாடங்களை படிக்க ஒதுக்க வேண்டும்.
4. தேர்விற்க்கு 2 அல்லது 3 வாரம் இருக்கும் போதே படிப்பதை நிருத்திகொள்ள வேன்டும், புதிதாக எதையும் படிக்காமல் இது வரை படித்ததை நினைவில் நிருத்த (revise பன்ன) வேண்டும். எனவே நாம் திட்ட மிடும் போது (Time table- போடும் போது) தேர்விற்க்கு 2 அல்லது 3 வாரத்திற்க்குள் எல்லா பாடத்தையும் படித்து முடித்து விடும் படியாக திட்ட மிடவேண்டும்.
5. பிரார்த்தனை : படிக்கும் முன் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து விட்டு படிக்க வேண்டும், நம் பெற்றோர்களையும் நமக்காக பிரார்த்தனை செய்ய சொல்ல வேண்டும், எதாவது பாடம் கடினமாக இருந்தால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
. ……. என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக! (அல்-குர் ஆன் 20 : 114)
என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! (அல்-குர் ஆன் 20 : 25)
என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்......(அல்-குர் ஆன் 28 : 24.)
…….. எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக …..(அல்-குர் ஆன் 18 : 10.)
6. நம்பிகையுடன் படிக்க வேண்டும் : படிக்கும் போது இந்த பாடத்தை நம்மால் படித்து தேர்வில் சரியான முறையில் எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் படிக்க வேண்டும் (Confident- இருக்க வேண்டும்). பாடம் கடினமாக உள்ளதே! எவ்வாறு இதை நாம் படிப்பது என்ற கவலையுடனோ அச்சத்துடனோ படிக்க கூடாது. Negative thoughts இருக்க கூடாது. நம்முடன் அல்லாஹ் இருக்கின்றான் நிச்சயம் அல்லாஹ் தேர்வில் நமக்கு உதவுவான் என நம்பிக்கையுடன் படிக்க வேண்டும் (Positive attitude இருக்க வேண்டும்).
7. படிக்கும் போதே முக்கியமான சமன்பாடுகள், சூத்திரங்களை தனியாக எழுதிவைத்துகொள்ள வேண்டும், பின்னர் நாம் பாடத்தை revise -பன்னுவதற்க்கு இது எளிதாக இருக்கும்.
8. படிக்கும் போது பாட்டு கேட்பது, டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது போன்றவற்றை கண்டிப்பாக தவிற்க்க வேண்டும். பாடத்தில் கவனத்தை செலுத்தி படிக்க வேண்டும்.
9. தேர்விற்க்கு முந்தய நாளே பேனா, பென்சில், இரப்பர், இன்னும் தேவையான அனைத்தையும் வாங்கி வைத்து கொள்ள வேண்டும். தேர்வு எழுத செல்லும்முன் எல்லவற்றையும் நாம் எடுத்து வைத்துவிட்டோமா என சோதனை செய்துவிட்டு செல்லவேண்டும்.
தேர்வு எழுதும் போது
தேர்வு எழுத பள்ளிக்கு சென்றவுடன் நேராக தேர்வறைக்கு சென்றுவிடவும், நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம், நாம் படிக்காத கேள்விகளை பற்றி நம்மிடன் அவர்கள் விவாதித்தால் அது நம்மை பலகீன படுத்தகூடும். தேர்வு எழுத முக்கியமான தேவையே நமது நம்பிக்கையாகும் (Confident), நம்பிக்கை இழந்துவிட்டோம் என்றால் தெரிந்த கேள்வியாக இருந்தாலும் கோட்டைவிட்டுவிடுவோம், எனவே நமது நம்பிக்கையை பலகீனபடுத்த கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.
1. தேர்வறைக்கு நுழைந்த உடன் உங்கள் சட்டை பை, பேண்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்து கொள்ளுங்கள், தேவையில்லாத பேப்பர்களை தூக்கி எறிந்து விடுங்கள், தேர்வு எழுதும் நார்காலியின் மீது ஏதாவது எழுதிருந்தால் அழித்து விடுங்கள், அழிக்க முடியவில்லை எனில் தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.
2. கேள்விதாள் வந்ததும் கவனமாக படிக்கவும், தெரியாத கேள்விகள் முதலில் வந்தால் மனம் தளர்ந்துவிட வேண்டாம் (Don’t loose your confident). தொடர்ந்து கேள்விதாளை படிக்கவும் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் கேள்விதாளை கவனமாக படிக்கவும்.
3. தேர்வு எழுதுவதற்க்கு முன் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவனுடைய அருளை வேண்டி பிரார்த்தனை செய்துவிட்டு எழுத ஆரம்பிக்கவும்.
என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன் என கூறுவீராக! …..(அல்-குர் ஆன் 23 : 118.)
விடை தாளில் 786 என எழுதுவது, நாகூர் ஆண்டவர் துணை என்று எழுதுவது போன்ற காரியங்களை கண்டிப்பாக தவிற்த்துவிடுங்கள், இப்படி எழுதுவது இஸ்லாத்தில் மாற்றமானது.
4. நன்றாக தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள், பிறகு ஓரளவிற்க்கு தெரிந்த கேள்விகளை எழுதுங்கள், இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு உங்களுக்கு தெரிந்த பதிலை எழுதுங்கள், தவறாக இருக்குமோ என அச்சம் வேண்டாம், எந்த கேள்வியையும் விடாமல் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள்.
5. பக்கம் பக்கமாக பதில் எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதுங்கள்(Points points-ஆக எழுதுங்கள்), முக்கியமான வரிகளை அடிகோடிடுங்கள், சமன்பாடுகளையும்.
6. சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் (Formulas and equations) கட்டத்திற்க்குள் எழுதுங்கள், வரைபடத்தின் மூலமும், அட்டவணை மூலமும் பதிலை விளக்குங்கள்.
7. பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள் அதிக நேரம் பிடிக்கும், எனவே முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்தில் எழுத முயற்சி செய்யுங்கள்.
8. ஒவ்வொறு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்க்குள் என்ன எழுத முடியுமோ அதை எழுதுங்கள், ஒரு கேள்விக்கான நேரம் முடிந்ததும் உடனே அடுத்த கேள்விக்கு சென்றுவிடுங்கள், ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிகொண்டு இருக்க வேண்டாம்.
9. விடைதாளை அளிக்கும் முன் கேள்வி எண்ணையும் பதில் எண்ணையும் சரிபார்த்துகொள்ளுங்கள்.
10. புதிய பேனாவை வைத்து எழுத வேண்டாம், வேகம் கிடைக்காது, நீங்கள் எழுதி பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள்.
11. எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிய பிறகு நேரம் இருந்தால் விடைதாளை அலகு படுத்தும் வேலையை செய்யுங்கள்.
தேர்வு எழுதி முடித்தபிறகு :
தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்க்கு செல்லவும் நண்பர்களுடன் வினா, விடை பற்றி விவாதிக்க வேண்டாம். நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளை சுட்டிகாட்டி நமக்கு மன உலைச்சலை ஏற்படுத்திவிடுவார்கள், இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும். இது நாம் அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாவதை பாதிக்கும், நாம் என்னதான் வருத்தப்பட்டாலும் கவலைபட்டாலும் திரும்பி அந்த தேர்வை எழுதமுடியாது, நமக்கு தெரிந்ததை எழுதிவிட்டோம் மீதத்தை அல்லாஹ் பார்த்துகொள்வான், எனவே தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்க்கு சென்று தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துவிட்டு அடுத்த தேர்விற்க்கு படிக்க ஆரம்பியுங்கள்.
அல்லாஹ்விடம் மட்டுமே கேட்ப்போம் , வெற்றி நிச்சயம் (இன்ஷா அல்லாஹ்)
நம் பிரார்த்தனை அல்லாஹ்விடம் மட்டுமே இருக்க வேண்டும். அல்லாஹ்வை தவிற வேறு யாரிடமும் நாம் உதவி தேடக்கூடாது.
(இறைவா!) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! …..(அல்-குர் ஆன் 1 : 4,5)
அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் பிராத்தனை செய்வது எந்த பலனையும் தராது. எனவே தர்ஹா, தகடு, தாயத்து என எதையும் நம்ப வேண்டாம், அல்லியாக்களிடம் பிரார்த்தனை செய்ய வேண்டாம், அல்லாஹ்விடம் மட்டுமே கேளுங்கள், அல்வ்லியாக்களிடன் கேட்பது, தர்ஹாக்களுக்கு செல்வது நேர்ச்சை செய்வது, தகடு தாயத்து அணிவது அல்லாஹ்விற்க்கு பிடிக்காக காரியம், அல்லாஹ்விற்க்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தக்கூடிய காரியம், அல்லாஹ்வுடைய அன்பையும் கருனையையும் பெறுவதுதான் நமக்கு முக்கியம். எனவே கண்டிப்பாக இது போன்ற (தர்ஹா, தகடு, தாயத்து) காரியத்தில் ஈடுபட வேண்டாம்
பெற்றோர்களே!
மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. மேலே குறிபிட்ட நடைமுறைகளை தங்களுடைய பிள்ளைகள் நடைமுறைபடுத்துகின்றார்களா என்பதை பெற்றோர்கள்தான் உறுதி செய்ய வேண்டும், ஏனேனில் மாணவர்கள் வயது குறைந்தவர்கள், பெற்றோர்கள்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எனவே பெற்றோர்கள் மேற்சொன்ன வழிமுறைகளை படித்து அதை தங்களுடைய பிள்ளைகளுக்கு தினமும் சொல்லி கொடுத்து கொண்டு இருக்க வேண்டும், தங்களுடைய பிள்ளைகள் சரியா படிக்கின்றதா என கண்கானிக்க வேண்டும். படித்ததை உங்களிடம் பார்க்காமல் எழுதி காண்பிக்க சொல்ல வேண்டும், படிப்பை தவிற மற்றதின் பக்கம் திரும்பிவிடாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
1. டிவி பார்ப்பதை தவிற்க்கவும், நீங்கள் டிவி பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருப்பார்கள் கேபிள் இனைப்பை கட்டாயம் துண்டித்துவிடவும்.
2. மாணவ மாணவிகளிடம் இருந்து கட்டாயம் செல்போனை பறித்துவிடவும் , தேர்வு முடியும் வரை செல்போனை தரவேண்டாம்.
3. வெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள், கணினியில் (Computer -ல்) படிப்பதற்க்கு தவிற வேரெதற்க்கும் பயன்படுத்த கொடுக்காதீர்கள். கம்ப்யூட்டரில் பாட்டு கேட்பது, சினிமா பார்பது, கேம் விளையாடுவது போன்றவற்றிக்கு முழுமயாக தடை போடுங்கள்.
4. பிள்ளைகளுக்கு நல்ல சத்துள்ள உணவை கொடுக்கவும், பிள்ளைகளை திட்ட வேண்டாம் சபிக்க வேண்டாம், அன்பாக அவர்களுடைய தவறை சுட்டிகாட்டவும்,
5. பிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட படிப்பதற்க்கான சூழ் நிலையை ஏற்படுத்திகொடுங்கள். படிப்பதை கண்கானியுங்கள். அதிகமாக மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவதாக சொல்லுங்கள்.
6. மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், நீங்கள்தான் அதிகமாக பணத்தை கொடுத்து கல்லூரியில் சேர்க்க வேண்டும். உங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் எடுத்தால் மிக குறைவான பணத்தில் கல்லூரியில் சேர்க்கலாம். எனவே உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுப்பது உங்களுக்குத்தான் மி
No comments:
Post a Comment