சென்னை : கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.,) பதவிக்கு காலியாக உள்ள 3,484 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தேர்வு நடத்தப்படும் என, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும், வி.ஏ.ஓ., பதவிக்கான காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. இதன்படி, காலியாக உள்ள 2,653 பணியிடங்களுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். "தற்போது கூடுதலாக 831 காலிப்பணியிடங்களுக்கும் சேர்த்து, மொத்தம் 3,484 பணியிடங்களுக்கு அடுத்த ஆண்டு பிப்., 27ல் தேர்வு நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேற்று அறிவித்தது. இந்த தேர்வை எழுத 10ம் வகுப்பு தேர்வாகியிருந்தால் போதும். விண்ணப்பங்களை அனுப்ப டிச., 28 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
dinamalar
No comments:
Post a Comment