இக்பால்
மீண்டும் ஒருமுறை உலகளாவிய பயங்கரவாதம் பற்றி வாய் ஓயாது பேசிச்
சலித்தாகிவிட்டது. கூடவே யாரும் சந்தேகப்பட்டுவிடாமல் இருக்க மறக்காமல்
தேஷ்பக்தியைப் பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு முழங்கி,
"அரசியல்வாதிகளையெல்லாம் சுட்டுக் கொல்லணும்பா, பாரு, வரி கட்டுறொம், ஆனா
உசிருக்கு பாதிகாப்பு இல்லே, இனிமே எதுக்கு வரி கட்டணும்?" போன்ற
தேஷ்பக்த வாதங்களை முன் வைத்த திருவாளர் மிடில்கிளாஷ், வழக்கம்போல்
டி.வி. பார்த்து, "சூப்பரா பாலைத் தூக்குனாம் பாரு, நான் நினச்சமாரியே
சிக்சர்... ஆனா அநியாயமா அவுட் டானாம்பா.."என்று சாராய வியாபாரி விஜய்
மல்லையாவின் குதிரை லாயத்தில் புதிதாகக் கட்டப் பட்ட கிரிக்கெட்
குதிரைகளின் இரண்டுகால் பாய்ச்சல் பற்றி சிலாகித்து புழகாங்கிதம் அடைந்து
மல்லாக்கப் படுத்து தூங்கப் போய்விட்டார். சர்வதேச உயிர்க் கொல்லி
விஷபானக் கம்பெனிகளுக்கு இந்தியாவில் விளம்பரப் பிராணியாக நடித்து
லட்சக்கணக்கில் காசு சம்பாதிக்கும் சில கிரிக்கெட் குதிரைகள் "எனக்கு
தேஷ்பக்திதான் முக்கியம்" என்று டி.வி.காமிராக்களின் முன் முழங்கியது
வடிவேலுவே பொறாமைப் படக்கூடிய அளவுக்கு சூப்பர் காமெடி சீன். நான் சொல்ல
வருவது 'இந்தியத்தொலைக்காட்சிகளில் முதல்முறையாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட
66 மணிநேர பயங்கரவாதம்' பற்றித்தான் என்று நீங்கள் ஊகித்திருந்தால்
அடுத்தமாத கேபிள் டி.வி.சந்தாவை உங்களுக்காக நான் கட்டுவேன். அது
பயங்கரவாதமா கிரிக்கெட்டா என்று குழப்பம் வருகிற அளவுக்கு
சி.என்.என்.நேரடி ஒளிபரப்பில் கீழ்மூலையில் ஸ்கோர் போடப்பட்டது. இறுதியாக
10 பயங்கரவாதிகள் சேர்ந்து 183 கொலைகள் செய்ததாக இறுதி ஸ்கோர் காட்டியது.
இப்படி நான் சொல்வதால் பயங்கரவாதமும் கிரிக்கெட்டும் ஒன்றா என்று நீங்கள்
கேள்வி கேட்டால், என் உறுதிமொழி வாபஸ், நான் கிரிக்கெட்டின் தாய்வீடான
இங்கிலாந்தின் பிரதமரைக் கேட்டுத் தான் பதில் சொல்ல முடியும், அதுவரை
நீங்கள் காத்திருக்கலாம்.
நவம்பர் 26ஆம் தேதி இரவு 1030 மணிக்கு மும்பை சத்ர பதி சிவாஜி ரயில்வே
ஸ்டேஷனில் நுழைந்த இரண்டு தீவிரவாதிகள் சரமாரியாகச் சுட்டதாகவும் ஒரு
ரவுண்ட் சுட்டபின் தீர்ந்துபோன மேகசனை மாற்றி மீண்டும் புது மேகசைன்
போடும் அளவுக்கு கால அவகாசம் இருந்ததாக அனைத்தையும் நேரில் பார்த்துக்
கொண்டிருந்த நேர அறிவிப்பாளரான விஷ்ணு தத்தாராம் ஜெண்டே கூறுகின்றார்.
அதன்பின் சாவகாசமாக டாக்சியைக் கைப் பற்றி தாஜ் ஓட்டலுக்கு
சென்றதாகவும்... மீண்டும் மறு ஒளிபரப்பு அவசியமில்லை என்பதால்
விசயத்துக்கு வருகின்றேன். இந்த பயங்கரவாதத் தாக்குதலால் பயனடைந்தவர்கள்
என்று இரண்டுபேரைக் கூற முடியும்- மீண்டும் ஒருமுறை தங்கள் தேஷ்பக்தியை
நாடெங்கும் ஓடவிட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான உள்நோக்க அரசியலைக்
கட்டவிழ்த்துவிட்ட ஆர்.எஸ்.எஸ்., அதன் அரசியல் முகமூடியான
பி.ஜே.பி.;உலகளாவிய பயங்கர வாதத்தை வேரொடு அறுக்க அவதாரம் எடுத்த உலக
ரட்சகன் அமெரிக்காவும் அதன் ஆயுத உற்பத்தியாளர் களும். டி.வி,
செய்தித்தாள், இணையதளம் போன்ற ஊடகங்கள் 'இழவு வீட்டில் காசு வைத்து
சூதாடி' நேரடி ஒளிபரப்பு செய்து தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டதுடன்,
மேற்படி ஆர்.எஸ்.எஸ். + அமொக்க கூட்டணிக்கு பிரச்சாரம் செய்து எஜமான
விசுவாசத்தையும் காட்டிக் கொண்டன, ஒரேகல்லில் ரெண்டு மாங்காய். அதற்கு
அடுத்துவந்த நாட்களில் இங்கிலீஷ், டமில் என எல்லா சானல்களிலும்
வெள்ளையும் சொள்ளையுமான நபர்களும், படப்பிடிப்பு தளத்துக்கு வெளியே
போனால் ஒருத்தர் மீது ஒருத்தர் சேறு, நரகல் என ஒன்று மிச்சம் வைக்காமல்
கையில் கிடைப்பதெல்லாம் அள்ளி வீசத் தயங்காத கரைவேட்டி ஆசாமிகளும்
உட்கார்ந்து கொண்டு தேஷ்பக்தி என்ற ஒன்றுதான் தங்களை இணைத்திருக்கும்
கண்ணி என்பதாக உணர்ச்சிவசப் பட்டு பயங்கரவாதம் பற்றிபேசிப்பேசி மாய்ந்து
போனார்கள். மூக்கைச் சிந்தி அழவில்லை என்பதுதான் பாக்கி. இதை ஊடக
பயங்கரவாதம் என்று ஏன் சொல்லக்கூடாது?
மும்பை பயங்கரங்கள் குறித்து விலாவரியாகப் பேசுவதானால், அதற்கு முன்
இரண்டு கேள்விகளைப் பற்றிப் பேச வேண்டும். விடுதலை பெற்ற இந்தியாவின்
பயங்கர வாதத்தை எங்கே இருந்து தொடங்குவது? உலகளாவிய பயங்கரவாத்தை எங்கே
இருந்து தொடங்குவது? இந்த இரண்டு கேள்விகளையும் பேசாமல் பயங்கரவாதம்
பற்றியும் தேஷ்பக்தி பற்றியும் உணர்ச்சிவசப்பட்டு பேசினால் இரத்த
அழுத்தம் ஏறுவதைத் தவிர வேறு ஒரு பிரயோசனமும் இல்லை.
1947க்குப் பின்னான இந்தியாவின் பயங்கரவாதம் என்பது ஆகஸ்ட் 15க்கு
முன்னதாகவே தொடங்கிவிட்டது. அதன் உச்சகட்டம்தான் பிரிவினையின்போது
வடக்கு, வட மேற்குப்பகுதிகளிலும் அதிகபட்சமாக பஞ்சாபிலும்,
கல்கத்தாவிலும் நடந்த கொடூரங்கள். இதைப்பற்றி தனியேதான் எழுத வேண்டும்.
இந்தப் படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் இந்து, முஸ்லிம், சீக்கியர் என்று
அனைத்துத் தரப்பாரும் இருந்தார்கள். அநேகமாக இந்தப் படுகொலைகள் அனைத்தும்
எந்தவிதமான திட்டமிடலும் இல்லாமல், அன்றைக்கு நிலவிய சூழ் நிலையில்
உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் ஒரு மதத்தவர் மேல் மற்றவர் கொண்ட எதிர்ப்பு
உணர்வாலும் நிகழ்ந்தவை, தனிநபர்களாலும் கூட்டமாகவும் நடத்தப்பட்டவை என்று
கூறலாம். ஆனால் முதன் முதலாக, சுதந்திர இந்தியாவின் நன்கு
திட்டமிடப்பட்ட, தனிநபர் மீதான ஒரு படுகொலை என்பது ஆர்.எஸ்.எஸ்.ஆல்
நடத்தப்பட்டது. அதன் இலக்கு மஹாத்மா காந்தியடிகள். படு கொலைக்கு ஒரே ஒரு
காரணம் மட்டுமே இருந்தது: அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை
வலியுறுத்தினார். எனவே 1948 ஜனவரி 20லிருந்து பேசத் தொடங்குவதுதான்
சரியாக இருக்கும். அன்றைக்கு பிர்லா மாளிகையில் காந்தியார் கூட்டத்தில்
பேசும்போது, அதற்கு பத்தடிகள் பின்னால் உள்ள அறையிலிருந்து நாதுராம்
கோட்சே வெடி குண்டை வீசவேண்டும், கூட்டத்தில் கலந்து விட்ட மதன்லால்பாவா
காந்தியாரை துப்பாக்கியால் சுட வேண்டும் என்பதே திட்டம். ஆனால் அவர்களே
எதிர்பாராத விதமாக, அந்த அறையின் ஜன்னல், தரையிலிருந்து எட்டு அடி
உயரத்தில் இருந்ததால் அன்றைய முயற்சி வெறும் வெடிகுண்டு வீச்சோடு
முடிந்தது, காந்தியார் இன்னும் ஒரு பத்துநாள் உயிரோடு இருந்தார். ஜனவரி
30 அன்று நாதுராம் கோட்சே அடுத்த முயற்சியில் காரியத்தை நிறைவேற்றினான்.
இந்து வைஸ்யரான மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தியை இந்து சித்பவன் பிராமணனான
கோட்சே சுட்டுக் கொன்றான் (இந்துக்களே, ஒன்று படுவீர்! இந்துக்கடைகளிலேயே
சாமான் வாங்குவீர், துப்பாக்கி வாங்குவீர்!) இப்படு கொலையைத் திட்ட மிட்ட
அனைவரும் இந்துக்களே - கோபால் கோட்சே, அவன் தம்பி நாதுராம், மதன்லால்
பாவா, கார்காரே, திகம்பர் பாட்கே, நாரயண் ஆப்தே, வீர சாவர்க்கார்.
(மாலேகாவ் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இந்துத்துவா தீவிர வாதிகளை
வெளிச்சத்திற்கு கொண்டுவந்த போலீஸ் அதிகாரி யின் பெயரும் ஹேமந்த்
'கார்காரே' என்பது வேடிக்கை!).
இந்தியாவில், ஒரு அரசியல் தலைவர் மீதான முதல் படு கொலையை நடத்தியது
இந்துத்வா பயங்கரவாதம்தான் என்பதையும், "இந்து முஸ்லிம் ஒற்றுமையை"
வலியுறுத்தியதற்கு எதிராகத்தான் அது நடத்தப்பட்டது என்பதையும் நாம்
அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும். அன்றைக்கு கோட்சே செய்திருந்த
ஆண்குறித் தோல்நீக்கமும் (இஸ்லாமிய மதச்சடங்கு), கையில் குத்தியிருந்த
இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரும் எதிர்கால இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். என்ன
செய்யப் போகின்றது என்பதை அறுதியிட்டுச் சொல்வனவாகவும் இரண்டு செய்திகளை
விட்டுச் செல்வன வாகவும் இருந்தன. அவர்களது நோக்கம், ஒன்று: சர்வதேச
அளவில் கவனத்தைப் பெற்ற, கால மெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமையை
வலியுறுத்திய தேசப்பிதா என்று அழைக்கப்பட்டவரை ஒரு முஸ்லிம்
கொன்றுவிட்டான் என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம், இந்தியாவில் உள்ள
முஸ்லிம் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச அளவில் முஸ்லிம்
மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டிவிடுவது, அனைத்து மத மக்களையும்
'முஸ்லிம் பயங்கர வாதத்துக்கு' எதிராகத் தூண்டி விடுவது. இரண்டு:
அவர்களது இந்துத்வா, அகண்ட பாரதம் குறித்த மதிப்பீடுகளுக்கு நம்மால் வர
முடிந்தது: இந்துத்வா தத்துவம் என்பது சூப்பர் டூப் புரட்டு; அது
உள்ளீடற்ற ஒரு வறட்டுத் தத்துவம், நியாயமான தர்க்கவாதம் செய்யத்தக்க
அளவுக்கு அடிப்படை நியாயம் ஏதும் அற்றது. ஹிட்லரின் நாஜியிசத்துக்கு நூறு
சதவீதம் ஈடானது. எனவேதான் ஒரு பரந்த வெகுஜன வெளியில் திறந்த விவாதத்தில்,
தர்க்க விவாதத்தில் தம்மால் ஜெயிக்க இயலாது என்று தெரிந்து கொண்ட
ஆர்.எஸ்.எஸ். கும்பல், ஹிட்லர் கையில் எடுத்த "வன்முறை, அடாவடித்தனம்,
எதிர்ப்பவர்களைக் கொன்று விடுவது" என்ற அதே வழிமுறையைக் கையில் எடுத்தது.
இன்றைய நிலையில் பயங்கரவாதத்தை அல்லது இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழித்துக்
கட்டி விட்டுத்தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக் கொண்டு முதுகு வரை
வாயைக் கிழித்துக்கொண்டு பேசும் ஊடகங்களும் ஆட்சியாளர்களும் கூட 1948
ஜனவரி 20, 30 பற்றியோ கோட்சேவின் முஸ்லிம் வேஷம் பற்றியோ பேசாமல் மிக
ஜாக்கிரதையாக தவிர்த்தே வந்திருக்கின்றார்கள். அநேகமாக இனிமேல்
பேசமாட்டார்களோ என்ற சந்தேகம் வருவதற்கு காரணம் உண்டு. காரணம், நமது
பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில்கூட "காந்தியாரை ஒருவன் சுட்டான்"
என்ற ஒற்றை வரியோடு காந்தியாரின் வரலாறு அல்லது கதை முடிந்து போகின்றது
என்பது தற்செயலான ஒன்றல்ல. மத்திய, மாநில கல்வித்திட்டங்களை இயற்றுகின்ற
பொறுப்பில் உள்ளவர்களும், இந்திய வரலாற்றை எழுதுகின்ற அதிகாரிகளும்,
பல்கலைக்கழக மானியக் குழுவில் இருக்கின்ற கனவான்களும் கோட்சேவின்
தம்பிகளாகத்தான் இருக்கின்றார்கள் என்பதைச் சொல்ல யாரும் தயங்க வேண்டாம்.
காந்தியாருக்கு நமது அரசு அதிகாரிகள் பரிவோடு செய்கின்ற அதிகபட்ச மரியாதை
என்பது, அக்டோபர் 2 பொது விடுமுறை (அன்று டி.வி.யில் இந்தியத்
தொலைக்காட்சியில் முதல்முறையாக சில தொடைகளைப் பார்க்கலாம்), ஜனவரி 30
அன்று 11 மணிக்கு ஒரு 'சங்கு'. அநேகமாக அடுத்த சம்பளக் கமிஷன் தலைவர்,
"எதுக்கு இதெல்லாம், வேஸ்ட்; உற்பத்தியப் பெருக்கணும்" என்று கேள்வி
கேட்டு இதற்கும் சங்கு ஊதிவிடுவார் என்ற சந்தேகம் உள்ளது.
1948 ஜனவரி 20, 30 ஆகியவற்றின் தொடர்ச்சியாக, அடுத்த ஒருங்கிணைக்கப்பட்ட
பயங்கரவாத நிகழ்வாக, 1984 இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கிய
இன மக்களுக்கு எதிரான காங்கிரசார் நடத்திய கொலை வெறித்தாண்டவத்தை
சொல்லலாம். இன்று மத்திய ஆட்சியில் மந்திரிகளாக இருக்கின்ற, நுனிநாக்கு
ஆங்கிலம் பேசுகின்ற பல கனவான்கள், அன்று டெல்லி வீதிகளில் கத்தியோடும்
கட்டாரியோடும் பெட்ரோல் கேன்களோடும் பல சீக்கியர்களைக் கொன்று குவித்த
பேர்வழிகள், கடைகளைச் சூறை யாடிக் கொள்ளை அடித்தவர்கள். இதன்பின்
நிகழ்ந்த மிகப் பெரும் திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட பயங்கர வாதமாக
1992 டிசம்பர் 6 அயோத்தி பாபர் மசூதி இடிப்பும் அதனைத் தொடர்ந்த
முஸ்லிம்களுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி.யின்
கொலைவெறித்தாண்டவமும், இதற்கு எதிர் வினையாக நாடெங்கும் நடந்த
குண்டுவெடிப்புக்களும். இந்த கொலைத்தாண்டவத்துக்கு தலைமை தாங்கி
நடத்தியவர் பிற்காலத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும்,
துணைப்பிரதமராகவும், அதன்பின் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருமாக
அதிகபட்ச இசட் பிரிவு பாதுகாப்புடன் ஊர் சுற்றுகின்றார். இந்த ஆசாமி
இப்போது தானே அடுத்த பிரதமர் என்ற கனவுடன் ஊர்ஊராக பிரச்சாரம் செய்து
வருகின்றார். ஆனாலும் ஆச்சரியம் இல்லை. இந்திய ஜன நாயகம் இதை
அனுமதித்துள்ளது. பாரத் மாதா கீ ஜே! தொடர்ச்சியாக, ஒரிசாவில் ஸ்டெயின்ஸ்
பாதிரியாரையும் அவர் பிள்ளைகளையும் வைக்கோல் போரில் போட்டு உயிரோடு
கொளுத்தியது, அதே ஒரிசாவிலும் குஜராத்திலும் கிறித்துவ, முஸ்லிம் மக்களை
நடுவீதியில் கத்தியால் கிழிப்பது, அவர்கள் பெண்களை கூட்டாக வன்புணர்ச்சி
செய்வது, நிர்வாணமாக ஊர்வலம் வரச்செய்வது, கர்ப்பிணி யாக இருந்தால்
வயிற்றைக் கிழித்து சிசுவை தீயில் போட்டு வாட்டுவது, சிறுவர் சிறுமிகளை
அறுத்து எறிவது எனத் தொடரும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., பஜ்ரங் தள், விஷ்வ
இந்து பரிஷத், சிவசேனா போன்ற பயங்கரவாத இயக்கங் களைப் பற்றிப் பேசாமல்
இந்தியாவில் பயங்கரவாதம் பற்றிய விவாதம் முழுமை பெறாது.
ஆர்.எஸ்.எஸ். கும்பல் பி.ஜே.பி. என்ற பெயரில் ஆட்சியில் இருந்த போது,
தான் ஆட்சியில் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இந்திய அரசு எந்திரத்தை
தனது இந்துத்துவா ஆசாமிகள் நடத்தவேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன்,
பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சில்
(ஐ.சி.ஹெச்.ஆர்), இந்திய தொல்லியல் துறை, உயர்கல்விக் கான
பாடத்திட்டங்களை வடிவமைக்கின்ற குழுக்கள், நீதிபதிகள், ராணுவத்தின்
உயரதிகாரிகள் என முக்கிய இடங்களில் இந்துத்துவா ஆர்.எஸ்.எஸ்.
வெறியர்களைக் கொண்டு திட்டமிட்டு நிரப்பியது. தேசத்தின் கல்வி, கலாச்சார,
நீதி நிர்வாக, அறிவுசார் துறைகளைக் கைப்பற்று வதில் ஆர்.எஸ்.எஸ். கும்பல்
வெற்றி பெற்றது. கடந்த பி.ஜே.பி. ஆட்சியில் இடதுசாரிகள் இதுபற்றி
தொடர்ந்து பேசியும் எச்சரித்தும் வந்தார்கள். ஆனால் கடந்த நான்கு
ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் ஆதரவுடன் இருந்த ஒரு ஆட்சியின் காலத்தில்
இத்துறைகளைக் கைப்பற்றிய இந்துத்துவாவாதிகளை வெளியேற்ற குறிப்பிடத்தக்க
வகையில் எதுவும் செய்ய இயலவில்லை. இந்திய வரலாற்று ஆராய்ச்சிக்
கவுன்சிலில் மட்டும் சில மாற்றங்களைப் பார்க்க முடிந்தது. எனவே இந்திய
ஆட்சியை, அதாவது அரசு எந்திரத்தை நடத்தியதும் நடத்துவதும்
ஆர்.எஸ்.எஸ்.இன் இந்துத் துவா ஆட்கள்தான் என்று சொன்னால் தவறில்லை,
உரக்கவே சொல்லலாம். நாம் வாய் மூடி மவுனமாக இருந்தால் எதிர் காலத்திலும்
அவர்கள்தான் நடத்துவார்கள்.
அமெரிக்க இந்திய அணுசக்தி ஒப்பந்தம் குறித்து எந்த அளவுக்கு தீவிர மாகப்
பேசப்பட்டதோ அதே அளவுக்கு தொடர்ந்து பேசப்பட வேண்டிய, பிரச்சாரம்
செய்யப்பட வேண்டிய விசயம் இது. மாலேகாவிலும், ஹைதராபாத் மெக்கா
மசூதியிலும், தமிழகத்தின் தென் காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திலும்
குண்டுவைத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். பேர்வழிகளே என்று இப்போது தெரிகின்றது,
பேசப்படுகின்றது. ஆனால், எங்கே யாவது தீபாவளி பட்டாசு வெடித்தாலும்
உடனடியாக 'இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் இதன் பின்னால் இருப்பதாக'
காவல்துறையினர் பேட்டி அளிப்பதும், சில இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்து
டி.வி.க்களில் காட்டுவதும் சாதாரணமாக நடக்கின்றது. ராணுவமும் இதற்கு
விதிவிலக்கு அல்ல. காஷ்மீரில் போலி என்கவுன்டர் களை நடத்தி அப்பாவி 16,
17 வயது முஸ்லிம் பையன்களை சுட்டு வீழ்த்தி தங்களது பதவி உயர்வுக்கு வழி
செய்து கொண்ட இந்துத்துவா ராணுவ அதிகாரிகளைப் பற்றி சில காலம் முன்பு
செய்தி வந்தது. ஆனால் இதுபற்றி அதன்பின் எந்தவிதமான தகவலும் இல்லை.
மாலேகாவ், ஹைதராபாத், தென்காசி குண்டு வெடிப்புக்களைப் போலவே, இந்த போலி
என்கவுன்டர்+பதவி உயர்வு குறித்தும், இதுவரை நிகழ்த்தப் பட்ட ராணுவ,
போலீஸ் துப்பாக்கிச்சூடுகள், என்கவுன்டர் களில் எங்கேயெல்லாம் முஸ்லிம்
மக்கள் கொல்லப்பட்டார் களோ அவை அனைத்தையும் மீண்டும் விசாரணைக்கு உட்
படுத்த வேண்டும் என்று கேட்பதிலும் நியாயம் உள்ளது.
இந்திய பயங்கரவாதத்தின் தொடக்கப்புள்ளி 1948 ஜனவரி 20 என்றால், நவீனகால
உலகளாவிய பயங்கரவாதத்தை எங்கே இருந்து பேசத் தொடங்குவது? ஸ்பானிய
மன்னனின் வேட்டை நாயான கொலம்பஸ், அமெரிக்க மண்ணில் கால் வைத்த நொடியில்
இருந்து தொடங்க வேண்டும். அதை அமெரிக்க பயங்கரவாதம் என்று சொன்னால்
தவறில்லை. வெள்ளையர்கள் குடியேற வெள்ளை மாளிகையைக் கட்டிய வர்கள்
ஆப்பிரிக்காவிலிருந்து குடியேற்றப்பட்ட கறுப்பு மக்கள் என்பது வரலாறு.
அந்த மாளிகையின் அஸ்திவாரமாக இருப்பது எது? கொலம்பசால் கொன்று
குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான செவ்விந்திய மக்களின் ரத்தமும் சதையும்.
கரையில் இறங்கிய கொலம்பஸ் கும்பலைக் கண்டு ஓடிவந்த சூதுவாது ஏதும் அறியாத
செவ்விந்திய மக்களை நோக்கி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் கொலம்பஸ்
கண்மூடித் தனமாக சுடத் தொடங்கிய அந்த நொடியில் இருந்துதான் உலகளாவிய
பயங்கரவாதம் பற்றிப் பேசத் தொடங்க வேண்டும். இயற்கையோடு இயைந்த
சுகாதாரமான வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த செவ்விந்திய மக்க ளுக்கு
கொலம்பசும் அவன் கும்பலும் கொடுத்த பரிசு, தாங்கள் எடுத்துச்சென்ற
பால்வினை நோய்களும் துப்பாக்கிச்சூடும் தான். எனவே உலகளாவிய பயங்கர
வாதத்தைத் தொடங்கி வைத்தது அமெரிக்காதான் என்றால் அது தவறு இல்லை. இது
ஏதோ இன்றைய அரசியல் நிகழ்வுகளில் இருந்து பின்னோக்கி அமெரிக்காவின் மீது
வீண்பழி போடும் முயற்சி அல்ல, நீண்ட நெடிய வரலாற்று உண்மை. தனது
சுயநலனுக் காக எந்த நாட்டின் மீதும் ஆக்கிரமிப்பு நடத்தவும் உயிரியல்,
ரசாயன, பவுதீக, பொருளாதார.... என அனைத்து ஆயுதங் களையும் பிரயோகிக்க
அமெரிக்கா என்றுமே தயங்கியது இல்லை. 1945 ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு
வீச்சு என்பது உண்மையில் ஒரு சோதனைதான். அணுகுண்டு வீசினால் உயிருள்ள
மக்களும், பிற உயிரினங்களும், ஜடப் பொருட்களும் என்ன ஆகின்றன என்று
சோதித்துப் பார்க்க விரும்பிய அமெரிக்க பயங்கரவாதிகளுக்கு, சோதனை எலி
களாகத்தான் அன்றைக்கு அப்பாவி ஜப்பானிய மக்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.
இது அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாதம் இல்லையா? இந்தியாவில்
ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவா கும்பல்கள் செய்கின்ற 'பயங்கரவாத'
எதிர்ப்பு பிரச்சாரத்திலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து செய்து
வருகின்ற 'பயங்கரவாத' எதிர்ப்பு பிரச்சாரத்திலும் ஒரு குறிப்பிட்ட
மதத்தவர் - இஸ்லாமிய மக்கள் - உலக மக்களின் எதிரியாக நிறுத்தப்படுவது,
ஒரு 'பொது எதிரி' யாக அடையாளப் படுத்தப்படுவது தற்செயலானதா
திட்டமிடப்பட்டதா என்ற கேள்விக்கான பதிலை வரலாறு திட்டவட்டமாக
வைத்திருக்கின்றது.
1900த்தின் முற்பகுதியில், ஈரானில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்ட பின்
அமெரிக்க பயங்கரவாதத்தின் இலக்கு அரபுப் பிரதேசத்தின் மீது விழுந்தது.
அதன் நாடு பிடிக்கும் கொள்கை, கூடவே லத்தீன் அமெரிக்க, மத்திய கிழக்கு,
அரபு நாடுகளில் ஒரு ரவுடியைப் போல் நுழைந்து கத்தியை வீசுகின்ற
பயங்கரவாதப்போக்கு, இந்த நாடுகளின் மக்கள் மத்தியில் அமெரிக்காவுக்கு
எதிரான தீராத பகையுணர் வைத் தோற்றுவிக்க காரண மாக இருந்தது.
அமெரிக்காவின் தந்திரமே அதுதான்! அடுத்தவன் வீட்டுக்குள் அதிரடியாக ஒரு
நாய் போல நுழைவ
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum
No comments:
Post a Comment