அஸ்ஸலாமு அலைக்கும்,
இன்றைய மருத்துவ சூழ்நிலையில், இரண்டாவது கருத்து என்பது தவிர்க்கமுடியாத ஒன்று என்பதை தெளிவாக உணர்த்தும் ஒரு சம்பவம், ராஜஸ்தானில் நடந்திருக்கிறது.
குறிப்பாக, நம் சமுதாய பெண்களுக்கு இப்படிப்பட்ட கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால், உடனடியாக, இன்னொரு மருத்துவரை அணுகி உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டியது நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமை.
நம் சமுதாய மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டிய நேரமிது.
படு பாவிகள், கர்ப்பப்பையையே எடுத்து விட துணிந்தவர்கள், எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
Regards
J. Jahir Hussain
http://ping.fm/YCM2v
சாதாரண வயிற்று வலி சிகிச்சைக்காக சேர்ந்த
226 பெண்களின் கர்ப்பப்பையை அகற்றிய அதிர்ச்சி சம்பவம்
ஆஸ்பத்திரிகளின் அங்கீகாரத்தை ராஜஸ்தான் அரசு ரத்து செய்தது
ஜெய்ப்பூர், ஏப்.17-
சாதாரண வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு வந்த 226 பெண்களின் கர்ப்பப் பையை அகற்றி அறுவை சிகிச்சை செய்த 3 மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ராஜஸ்தான் அரசு ரத்து செய்தது.
226 பெண்கள்
ராஜஸ்தான் மாநிலம் டவுசா பகுதியில் உள்ள சில மருத்துவமனைகள் மீது புகார் வந்தது. அங்குள்ள சில மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக செல்லும் பெண்களுக்கு தேவையே இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப் பையை அகற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரில் பண்டிகுய் நகரில் உள்ள மருத்துவமனைகளில் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த அவலம் நடைபெறுவதாக கூறப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் சிகிச்சைக்கு சென்ற 385 பெண்களில் 226 பெண்களுக்கு கர்ப்பப் பை அகற்றப்பட்டு இருக்கிறது. இந்த தகவல்களை அரசின் கவனத்துக்கு தொண்டு நிறுவனத்தின் பொதுச் செயலாளர் துர்கா பிரசாத் கொண்டு சென்றார்.
விசாரணை கமிட்டி
எனவே, ராஜஸ்தான் மாநில அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. புகாருக்கு உள்ளான 5 மருத்துவமனைகளில் சோதனை நடத்தி நோயாளிகள் பற்றிய ஆவணங்களை கைப்பற்றியது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் 3 மருத்துவமனைகளின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக டவுசா மாவட்ட தலைமை சுகாதார அதிகாரி ஓ.பி.மீனா தலைமையில் 3 நபர் விசாரணை கமிட்டியை அரசு நியமித்துள்ளது. ஆவணங்களில் உள்ள தகவல்களைக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்கள் மற்றும் டாக்டர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. அவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், "எனக்கு பல நாளாக வயிற்று வலி இருந்தது. சிகிச்சைக்கு சென்றபோது, கர்ப்பப் பையை அகற்றினார்கள். ஆனாலும், வலி தொடர்ந்தது. இதையடுத்து, ஜெய்ப்பூர் சென்று சிகிச்சை மேற்கொண்டேன். அப்போது தான், வயிற்று வலிக்கு வேறு காரணம் என்றும் தவறுதலாக கர்ப்பப் பை அகற்றப்பட்டதையும் அறிந்தேன்'' என்றார்.
மருத்துவமனைகள் மறுப்பு
இதற்கிடையே, குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகங்கள் மறுத்துள்ளன. தேவையில்லாமல் கர்ப்பப் பையை அகற்றுவதில்லை என டாக்டர்களும் நிர்வாகங்களும் தெரிவித்தன.
புகாருக்கு ஆளான தனியார் மருத்துவமனை ஒன்றின் உரிமையாளர் டாக்டர் ராஜேஷ் தாகத் கூறுகையில், "சிகிச்சைக்கு வரும் பெண்களில் 90 முதல் 95 சதவீதம் பேருக்கு கர்ப்பப் பையை அகற்றியதாக எங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், 20 முதல் 25 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே கர்ப்பப் பை அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது'' என கூறினார்.
No comments:
Post a Comment