Tuesday, March 23, 2010

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

இன்ஷா அல்லாஹ் வருகிற 9-ம் தியதி ஏப்ரல் 2010-ல் 12-வது ஒரு நாள் இஸ்லாமிய கருத்தரங்கம் சவூதி அரேபியா ஜீபைல் மாநகரில் நடைபெற இருக்கிறது.

வழமை போல் இவ்வருடமும் வினாத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. அதற்க்கான பதிலை குர் ஆன் மொழிபெயர்ப்பு மற்றும் ரியாளுஸ்ஸாலிஹீன் ஹதீஸ் தொகுப்பில் இருந்து எடுத்து எழுத வேண்டும்.

எனவே விடை தேடுவதற்கு தேவையான ரியாளுஸ்ஸாலிஹீன் பகுதி மட்டும் ஸாஜிதா புக் சென்டரால் வெளியிடப்பட்ட புத்தகத்தில் இருந்து ஸ்கேன் செய்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

எனவே நீங்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் எண்ணம் உடையோராக இருந்தால் (கலந்து கொள்பவர்களுக்கு மட்டமே பரிது வழங்கப்படும் என்பதால்), வினாத்தாளை நீங்கள் இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை என்றால், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள வினாத்தாளை A3 Paper-ல் BACK to BACK பிரிண்ட் எடுத்து விடைகளை டிக் செய்து, தபால் உறையிலிட்டு 02-ம் தியதி ஏப்ரல் 2010-க்குள் கிடைக்கும்படி ஜீபைலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

01-ம் தியதி (வியாழக்கிழமை) ஏப்ரல் 2010-க்குள் அல்கோபார் இஸ்லாமிய அழைப்பு & வழிகாட்டல் மையத்தில் ஒப்படைத்து விட்டால் இன்ஷா அல்லாஹ் விடைத்தாள்கள் ஜீபைல் சென்டருக்கு அனுப்பி வைக்கப்படும்.

குறிப்பு: வினாத் தாளுக்கு தேவையாக இருந்ததால் தேவையான ரியாளுஸ்ஸாலிஹீன் பகுதி மட்டும் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. வெளியீட்டாளரின் அனுமதி பற்றிய விபரம் தெரியாததால் அது அல்லாமல் மற்ற வகையில் ரியாளுஸ்ஸாலிஹீன் Soft Copy -ஐ (இணையத்தில் போட்டு லிங்க் கொடுப்பது போன்று) பயன் படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

அனீஸ் முனவ்வர்
அல்கோபர், சவூதி அரேபியா
Mob. # +966 55 1011635
Tel. # +966 3 897 1050 x 287

No comments: