உங்களால் ஒரு செயலைச் செய்ய முடியாவிட்டால் “ஐயோ! இந்தச் செயலை நம்மால் செய்து முடிக்க இயலவில்லையே!” என்ற ஏக்கமும் கவலையும் வந்து விடுகிறது. இதனால் உங்கள் மனம் பேதலித்துப் பலவகை உணர்ச்சி களினால் தத்தளித்துத் தடுமாறுகிறது. நீங்கள் மட்டுமல்ல உங்களைப் போன்று எத்தனையோ பேர் உள்ளக் கிளர்ச்சிகளினாலும், மன எழுச்சி களினாலும், தடுமாறித் தவித்துக் கொண்டிருக் கிறார்கள். காரணம், அவர்கள் உள்ளத்தைச் செம்மைப்படுத்தாததுதான்! ஒருவருக்கு இருக்கும் ஆற்றல் மற்றவருக்கு இருக்கும் என்று கூறமுடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு குறைபாடு இருந்து கொண்டுதான் இருக்கும். ஒருவர் ஒல்லியான தேகத்தைப் பெற்ற வராக இருப்பார். இன்னொருவர் குள்ளமான தேகத்தைப் பெற்றவராக இருப்பார். மற்றொருவர் அடர்த்தியான கறுப்பு நிறத்தைக் கொண்டவராக இருப்பார். கொடிய பிணி யினால் பாதிக்கப்பட்டவராக இருப்பார். மூளை வளர்ச்சி குன்றியவராக இருப்பார். திக்குவாயை உடையவராகவும், கீச்சுக்குரலை உடையவ ராகவும், இருப்பார். அனைவராலும் வெறுக்கத் தக்க தடித்த, அகலமான மூக்கைக் கொண்ட வராக இருப்பார். பெண்களில் ஓரிருவர் ஆண்களின் குரல் பேசுபவர்களாக இருப்பார்கள். ஓரிருவர் முகத்தில் மீசை முளைப்பதும் உண்டு. மனிதர் களுக்குள் இப்படி எத்தனையோ குறை பாடுகள் இருக்கின்றன. இவர்கள் எல்லோருமே தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டு, தங்கள் செயல் பாடுகளை முடமாக்கி விட்டால், அவர்களால் முன்னேற்றப்பாதைக்குச் செல்ல முடியுமா? படத்தில் இருப்பது: உங்களை யாரும் தாழ்வாக எண்ண முடியாது, உங்களுடைய அனுமதி இல்லாமல் - எலியனெர் ரூஸ்வெல்ட். தங்கள் மன உறுதியினால், தங்களிடம் உள்ள குறைபாடுகளைப் பொருட்படுத்தாமல், உறுதியோடு முயன்றால் வேகமாக முன்னேறுவார்கள். அவர்களுக்கு இந்த மன உறுதியைத் தருவது அவர்களிடமுள்ள தன்னம்பிக்கைதான்! இந்தத் தன்னம்பிக்கையைத் தவிடு பொடியாக்கிடச் சிலர் வந்து விடுகிறார்கள். உடல் ஊனமுற்றவர், எந்த ஊனமும் உடல் இல்லாமல் இருக்கும் ஒருவரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுகிறார். கறுப்பு நிறத்தை உடை யவர், சிவப்பு நிறத்தை உடையவரைப் பார்த்து ஏங்குகிறார். இப்படி ஒருவர் மற்றவரைப் பார்த்து ஏங்கும் போது, அங்கே அவர்களிடத்தில் தாழ்வு மனப்பான்மை தோன்றி விடுகிறது. எந்தக் காரணத்தைக் கொண்டும் மற்றவரோடு நம்மை ஒப்பிட்டுப் பேசக் கூடாது. இவ்வாறு ஒப்பீடு செய்யும்போது, தன்னம்பிக்கைக் குறைவு ஏற் பட்டுத் தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது. எனவே நீங்கள் மற்றவரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருக்கும் வரை தன்னம்பிக்கை ஒளி உங்கள் வாழ்வில் சுடர் விட்டுப் பிரகாசிக்கும். நீங்கள் நீங்களாகவே இருந்தால் தான் வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைக்க முடியும். இப்படி நீங்கள் நீங்களாகவே மாறும் போது உங்களை வருத்தி, கவலையடையச் செய்த தாழ்வு மனப் பான்மை உங்களைத் தோற்கடிக்க முடிய வில்லையே என்று எண்ணித் தாங்க முடியாத தோல்வியால் வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிற்கும். தாழ்வு மனப்பான்மைக்குக் காரணம், ஒப்பீடு செய்யும் மனோபாவம் தான்! இந்த ஒப்பீடு மற்றவரோடு செய்யும் கொள்கையைச் சிறுவயதிலிருந்தே நாம் கடைப்பிடித்து வருகிறோம். “நீயும் தான் இருக்கிறாயே, மக்கு! வகுப்பில் அவன்தான் முதல்!” என்று பெற்றோர் கள் திட்டும்போது, அதைக் கேட்கும் மகன் மகிழ்ச்சியின் உச்சிக்கா போவான்? மீள முடியாத துக்கத்தில் ஆழ்ந்து விடுவான். கருத்தொருமித்த இல்வாழ்க்கையில் தேவையில்லாமல் புகுந்து கணவன் மனைவி ஆகியோரைப் பிரிக்கத் துடித்துத் துணையாக இருப்பதும் இந்தத் தேவையில்லாத ஓப்பீடுதான் தன்னுடைய கணவன் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டாலும் கூட, ஒரு பெண் ணுக்குத் தன்னைப் பற்றித் தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது. “என் கணவர் அரசு அலுவலகத் தில் சாதாரண எழுத்தராகப் பணியாற்றி வரு கிறார். எண்ணிச்சுட்ட பலகாரமாய் பட்ஜெட் வாழ்வு! அதோ, காரிலே கம்பீரமாகப் போய்க் கொண்டிருக்கிறாரே அவர் பிரபலமான ஒரு ஜவுளிக்கடையின் அதிபர் உம்.ம்…. ஒரு ஜவுளிக் கடை அதிபர் நமக்குக் கணவராக வந்து வாய்த்திருக்கக் கூடாதா? என்று மனதிற்குள் நினைக்கிறாள். தனக்குக் கிடைத்த வாழ்க்கையில் திருப்தி காணாமல் – நிம்மதி தேடாமல் எட்டாத பழத்திற்குக் கொட்டாவி விட்ட கதையாக ஆகும் போது, தாழ்வு மனப்பான்மை அங்கே கொடி கட்டிப் பறக்கிறது. கணவனும் அப்படித்தான்! ‘இவளைத் திருமணம் செய்து கொண்டு என்ன சுகத்தைக் கண்டேன்’! அதோ போகிறாளே! அவளைத் திருமணம் செய்து கொண்டிருந்தால் என் வாழ்க்கை செழிப்பாக அமைந்திருக்குமே! என்று ஏக்கப் பெருமூச்சு விடுவதற்குக் காரணம், வாழ்க்கையில் என்றைக்கும் துன்பத்தைத் தருகின்ற இந்த ஒப்பீடுதான்! தமிழோடு மற்ற மொழியிலுள்ள இலக் கணங்களை ஒப்பிட்டு ஒப்பிலக்கணம் என்ற அருமையான நூலைப் படைத்தனர். இந்த ஒப்பீடு, மொழியின் செம்மைக்கும், வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவி செய்யும். ஆனால் ஒரு மனிதனோடு, மற்றொரு மனிதனை ஒப்பிட்டுக் கூறிக் குறைகளைச் சுட்டிக் காட்டும் போது மன உறுதியில்லாதவர் மனதில் தாழ்வு மனப்பான்மை வெள்ளமெனப் பெருகி ஓடும் என்பதில் துளியும் ஐயமில்லை. என்னால் யாருக்கும் ஒரு பயனுமில்லை. இந்த உலகம் என்னை ஒதுக்கி வைத்து விட்டது. என்னை யாரும் கண்டு கொள்வதே இல்லை. மற்றவரைப் புகழ்ந்து பேசும் உலகம் என்னை மட்டும் ஏன் பேசுவதில்லை? என்றெல்லாம் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் உங்களைத் தாழ்வு மனப்பான்மை ஆட்டிப் படைக்கும். உங்களைப் பற்றி நீங்களே மிகவும் இழிவாக நினைத்துக் கொண்டிருந்தால் அதைத் தாழ்வு மனப்பான்மை என்று எண்ணாமல், உயர்வு மனப்பான்மை என்று எப்படிச் சொல்ல முடியும்! இந்த உலகம் என்னைப் புகழ்ந்து பேச வேண்டும். என்னை எல்லோரும் கண்டு கொள்ள வேண்டும். இந்த உலகம் என்னை ஒதுக்கி வைக்கக் கூடாது. என்னால் இந்த உலகத்திற்கே நன்மை என்றùல்லாம் நீங்களாகவே சில தீர்மானங்களைப் போட்டு உங்கள் உள்ளம் என்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்குக் காரணம், உங்களிடமுள்ள தாழ்வு மனப்பான்மையே! உங்களைக் கேவலப்படுத்துவதற்காக, வேண்டுமென்றே பிறர் உங்களை மட்டம் தட்டும் போதோ அல்லது கேலியாகப் பேசும்போதோ அவைகளை நீங்கள் நம்பி விடுகிறீர்கள். மற்றவர்கள் பேசும் மட்டமான பேச்சுக்கள் உங்கள் மனதில் அம்புகளாக மாறி விடுகின்றன. அவைகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் போதோ அல்லது அவைகளைக் கண்டு வருத்தப்படும் போதோ, தாழ்வு மனப்பான்மை என்ற சைத்தான் உங்கள் உள்ளத்தில் வந்து உட்கார்ந்து விடுவான். இந்தத் தாழ்வு மனப்பான்மையை உங்களிடமிருந்து போக்க முடியாதா? ஏன் முடியாது? எவர் எதைச் சொன்னாலும், உலகமே உங்களை எதிர்த்தாலும் நீங்கள் உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள். நீங்கள் உங்கள் மேல் வைக்கும் தன்னம்பிக்கையால் தாழ்வு மனப்பான்மை உங்களை விட்டு ஓடி விடும். இந்த உலகம் உங்களைப் புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் அதைக் காதில் போட்டுக் கொள்ளாதீர்கள்! அவைகளைத் துச்சமென மதியுங்கள், உங்கள் மனதைப் பற்றியிருந்த தாழ்வு மனப்பான்மை என்ற அச்சம் கண் காணாத இடத்திற்குச் சென்றுவிடும். எந்தக் காலத்திலும் உங்களைப் பற்றிய தளராத நம்பிக்கையோடு நீங்கள் செயல்படுங்கள். தாழ்வு மனப்பான்மையை அடியோடு தகர்த்தெறியுங்கள். வெற்றிமகள் உங்களுக்கு மாலை சூட்டி மகிழ்ந்திட விரைவில் வந்திடுவாள்! அஹ்மத் ஆபித்.
Visit: www.mohamedbunder.tk
Saturday, July 2, 2011
visit: www.mohamedbunder.tk
தஞ்சை மற்றும் திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய விரைவு பாஸ்போர்ட் அலுவலகங்கள் இம்மாத இறுதியில் திறக்கப்பட உள்ளன. இவை பொதுமக்களுக்கு விரைந்து பாஸ்போர்ட் கிடைக்க வகை செய்யும்.
பாஸ்போர்ட் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களைப் போக்கும் வகையில் மத்திய அரசின் வெளியுறவுத்துறை மூலம் திருச்சி, தஞ்சையில் அதிநவீன பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட உள்ளன.
இதற்காக திருச்சி கோகினூர் தியேட்டர் அருகே அமைக்கப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் திருச்சி, பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும், தஞ்சையில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டத்தில் வசிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அதேசமயம் ஏற்கனவே இங்கு நடைமுறையில் உள்ள 8 மாவட்டத்திற்கும் திருச்சியில் விண்ணப்பிக்க எந்தத் தடையும் இல்லை.
இந்தச் சேவை மையங்கள் முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் காத்திருப்பு அறை, விசாரணை அறை, குழந்தைகள் பராமரிப்பு பிரிவு மற்றும் கூடுதலான கவுன்டர்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஜெராக்சும் இங்கேயே எடுத்துக் கொள்ளலாம். இதற்காக தனிக்கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது.
ஆன்லைன் மூலம் செயல்படும் இந்த மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கும், ஆன்லைனில் காவல்துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்யும் பணிக்காக 8 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது.
இந்தச் சேவை மையத்துடன் அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களும் பிரத்யேக மென்பொருள் மூலம் இணைக்கப்படும். விண்ணப்பங்கள் குறித்த காவல்துறையினரின் விசாரணை அறிக்கை ஆன்லைன் மூலம் சேவை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
இதனால் விண்ணப்பதாரர்களுக்கு தற்போது உள்ளதை விட, 10 நாட்கள் முன்கூட்டியே பாஸ்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேசமயம் காவல்துறையினரின் விசாரணை அறிக்கை தேவைப்படாத நபர்களுக்கு 2 நாளிலேயே பாஸ்போர்ட் கிடைக்கும் வகையில் சேவை வேகப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நவீன வசதிகளுடன்கூடிய பாஸ்போர்ட் சேவை மையங்கள் இம்மாதம் 29ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

As Received
---------------------------------------------------------------------------------------------------
வயசுக்கு வந்த பிள்ளையை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்? கொஞ்சம் நில்லுங்கள். உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை விட அதிகம் தேவை நீங்கள் தான். திருதிருவென்று முழிக்காதீங்க... உறவு முறைகளிலேயே மிகவும் அழுத்தமானது தந்தைக்கும் மகளுக்குமுள்ள உறவு தான் என்கிறார் ஒரு .ஃபிரான்ஸ் நாட்டு அறிஞர்.
தந்தையின் நேசம் கலந்த வழிகாட்டுதல் இல்லாத இளம் வயதுப் பெண்கள் பல்வேறு சிக்கல்களில் விழுகிறார்கள். சிறுவயதிலேயே அவர்கள் பாலியல் ரீதியாக பலவீனப்படுகிறார்கள். தேவையற்ற தாய்மையைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் விரிவான ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.
இந்த ஆராய்ச்சியை முன் நின்று நடத்தியவர் நியூசிலாந்திலுள்ள கேண்டர்பர்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான புரூஸ் ஜே எல்லிஸ். டீன் ஏஜ் பருவத்திலேயே செக்ஸ் பிரச்சினைகளில் மாட்டி கர்ப்பமாவது அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் சர்வ சாதாரணம். இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என அவர்கள் அலசி ஆராய்ந்தபோது தான் சிக்கியிருக்கிறது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மை. தந்தையின் சரியான வழிகாட்டுதல், அன்பு, அரவணைப்பு இல்லாதது தான் எல்லா பிரச்சினைக்கும் மூல காரணமாம். இப்போது சொல்லுங்கள், டீன் ஏஜ் பெண்ணின் வளர்ச்சிக்கு நீங்கள் தேவையா இல்லையா ?
ஒரு டீன் ஏஜ் மகளுக்கு அப்பா என்பவர் வெறும் ஒரு நபரல்ல. ஒரு நண்பன், பாதுகாவலன், ஊக்கமூட்டுபவர், உற்சாகப்படுத்துபவர், தன்னம்பிக்கை வளர்ப்பவர், நம்பிக்கை ஊட்டுபவர், பண்புகளை ஊட்டுபவர், வழிகாட்டி என எக்கச்சக்க முகங்கள் அவருக்கு இருக்க வேண்டும். ஒரு பெண் முதலில் சந்திக்கும் ஆண் அவளுடைய அப்பா தானே? அப்பாவிடமிருந்து தான் அவள் ஒரு ஆணுக்குரிய இலக்கணங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவனின் குணாதிசயங்களைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவருடைய அளவீடுகளைக் கற்றுக் கொள்கிறாள். ஆண் என்பவரின் தேவையைக் கண்டு கொள்கிறாள். எனவே மகள் மழலையாய் இருக்கும் போதே எல்லா வகையிலும் முன் மாதிரியான வாழ்க்கை வாழவேண்டியது அப்பாவின் கடமையாகிறது.
சின்ன வயதில் மழலையாய் சிரித்துச் சிணுங்குகையில், அழகழகாய் ஆடைகள் வாங்கிக் கொடுப்பதானாலும் சரி, பென்சில், ரப்பர் வாங்குவதானாலும் சரி ரொம்பவே ஈடுபாடு காட்டுவீர்கள். எல்லாவற்றையும் தேடித் தேடி வாங்குவீர்கள். பாப்பாவும் ரொம்பவே சமர்த்தாய் உங்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தம் தருவாள். திடீரென ஒரு நாள் பார்த்தால், சட்டுபுட்டுன்னு வளர்ந்து நிர்ப்பாள். "என் டாடி சூப்பர்" என்று சொல்லிக் கொண்டிருந்தவள், "டாடிக்கு ஒரு மண்ணும் தெரியாது" என்று பல்டி அடிப்பாள். மூக்குத்தியை எடுத்து நாக்கில் மாட்டுவாள். டென்ஷன் ஆகாதீர்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அவளுடைய உடல், மன மாற்றங்கள் தான்.
என் பொண்ணுக்கு என்னைக் கண்டாலே புடிக்கல. அவளுக்கு நான் இனிமே தேவையில்லை என்றெல்லாம் உளறிக் கொட்டாதீர்கள். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் மகள் உங்கள் மகள் தான். உங்கள் மீதான பாசமும், அன்பும், கரிசனையும் எப்போதுமே அவளிடம் நிரம்பி இருக்கும். ஆனால் அவளுடைய வெளிப்படுத்தல்களில் தான் எக்கச் சக்க மாற்றங்கள் முண்டியடிக்கும்.
"டாடி பிளீஸ்.... டாடி... வாங்கிக் கொடுங்க டாடி" என்று சின்ன வயதில் கெஞ்சிய மகள் "டாட்.... எனக்கு இது வேணும். முடியுமா முடியாதா?" என பிடிவாதம் பிடிப்பாள். உடனே நீங்கள் பதட்டப்படுவீர்கள். ஆனால் உண்மையில் அவள் உங்களுடைய அனுமதியை எதிர்பார்த்து நிற்கிறாள். அப்பாவின் அனுமதி இருந்தால் தான் அவளுக்கு அதில் ஒரு ஆத்ம திருப்தி. நீங்க பாட்டுக்கு எல்லாவற்றையும் சகட்டு மேனிக்கு நிராகரித்துத் தள்ளாதீர்கள். "நல்லதுன்னா அப்பா ஒத்துப்பார்" எனும் நிலமை தான் இருக்க வேண்டுமே தவிர "அவர் கிட்டே என்ன சொன்னாலும் வேலைக்காவாது" என்ற நிலைக்கு நீங்கள் வந்து விடவே கூடாது.
இது ஒரு நீச்சல் போல. கரையில் இருந்து கொண்டே நீங்கள் ஆர்டர் போட முடியாது. இன்னும் சொல்லப் போனால் டீன் ஏஜ் பருவத்தினருக்கு அட்வைஸ் எனும் வார்த்தையே அலர்ஜி. காரணம் பெரும்பாலும் அவளுடைய விருப்பத்துக்கு நேரானதாகத் தான் இருக்கிறது அப்பாக்களின் அட்வைஸ். அதற்காக நல்ல விஷயங்களைச் சொல்லக் கூடாதா என்பதல்ல. அதை செயலில் காட்டவேண்டும். அல்லது நாசூக்காக விளக்க வேண்டும். பேசுவதை விட மிக மிக அதிகமாய் மகள் பேசுவதைக் கேட்கவேண்டும். அது தான் முக்கியம்.
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், "என் அப்பா டெக்னாலஜியில் என்னைப் போல ஹைடெக்.." என கருதுவதில் உங்கள் மகளுக்கு இருக்கும் மகிழ்ச்சி அலாதியானது. நீங்கள் அந்த டெக்னாலஜி உலகுக்குள் நுழைந்தால் தான் அதிலுள்ள நன்மை தீமைகளை நாசூக்காக உங்கள் மகளுக்குச் சொல்லவும் முடியும்! அதை விட்டு விட்டு, "என்ன இவ சாப்பிடும்போ எஸ் எம் எஸ் அடிக்கிறா, பேசிகிட்டே எஸ் எம் எஸ் அடிக்கிறா, ஆர்குட், பேஸ் புக் என்னன்னவோ சொல்றா...." என புலம்பித் தள்ளாதீர்கள்.
இன்னொரு விஷயம், உங்கள் மகள் பருவத்துக்குரிய வனப்புடன் வளர்கிறாள் என்றதும் தள்ளியே நிற்காதீர்கள். அது மன அளவில் உங்கள் டீன் ஏஜ் மகளைப் பாதிக்கும் என்கின்றனர் உளவியலார்கள். உங்கள் மகளின் தோளைத் தட்டிப் பாராட்டுவதோ, தலையைக் கோதிப் பாராட்டுவதோ, செல்லமாய் அரவணைத்துக் கொள்தலோ அவளுக்கு ரொம்பவே தேவை.
அடிக்கடி வெளியே கூட்டிப் போங்கள். ஐஸ்கிரீம் பார்லர் போன்ற இடங்களுக்கு ஜாலியாகப் போய் வாருங்கள். மகளுடன் நிறைய நேரம் செலவிடுங்கள். நிறைய நேரத்தை நீங்கள் அவளுடன் செலவிடும்போது அவளுக்கு இயல்பான உரையாடல் சாத்தியப்படுகிறது. நினைத்ததை எப்படியேனும் வெளிப்படுத்தி விடுவாள். அவள் பள்ளியிலோ, கல்லூரியிலோ ஏதேனும் விழா நடக்கிறது , அழைக்கிறாள் என்றால் தவற விடாதீர்கள். வெறுமனே நீங்கள் அவளுடன் இருந்தால் போதும் அவள் உங்களை ரொம்பவே கொண்டாடுவாள்.
நீங்கள் அவளை அன்பு செய்கிறீர்கள். சரி! மதிக்கிறீர்கள். சரி! ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்களா? இல்லையேல் அதைச் சொல்லுங்கள் முதலில். டீன் ஏஜ் மனது எதிலும் வெளிப்படையாய் இருக்க விரும்பும் மனது. சுற்றி வளைத்து எதையும் பேசாமல், உங்கள் மகளை நீங்கள் மதிக்கிறீர்கள், அன்பு செய்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள்.
டீன் ஏஜ் மகளின் தினசரிகள் பல்வேறு அனுபவங்களால் நிரம்பி வழியும். ஆனந்தம், கவலை, எரிச்சல், சோகம் என எக்கச் சக்க உணர்வுகள் நிரம்பி வழியும். சக தோழிகளின் கிண்டல், படிப்பு, அழகு என கண்டதுக்கும் கவலைப்படும் வயது அது. அதை முதலில் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும். "எதுவானாலும் கவலையில்லை .... அப்பா இருக்கிறார்" எனும் நம்பிக்கையை நீங்கள் உங்கள் மகளிடம் ஊற்ற முடிந்தால் அதை விடப் பெரிய விஷயம் ஏதும் இல்லை. அதற்கு மகளிடம் உண்மையாய் இருக்க வேண்டியது உலக மகா தேவை!
மகளிடம் நீங்கள் எந்த அளவுக்கு உண்மையாய், நம்பிக்கைக்குரியவராய் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு அவள் உங்களிடம் வெளிப்படையாய் பேசுவாள். உண்மையை உள்ளபடி பேசுவாள். அப்படி மனம் திறந்து பேசும் போது எந்தக் காரணம் கொண்டும் அவளைத் திட்டாதீர்கள். அவள் என்னதான் மிகப்பெரிய தவறு செய்திருந்தாலும் சரி, உணர்ச்சி வசப்படாதீர்கள். பிரச்சினைகள் – விளைவுகள் – தீர்வுகள் என சிந்தியுங்கள். நீங்கள் பதட்டப்பட்டு உங்கள் கோபத்தையும், ஆத்திரத்தையும் மகளிடம் காட்டி விட்டால் போச்சு. அது வீட்டைப் பூட்டி சாவியை தூர எறிவதற்குச் சமம். உங்கள் மகள் அதன் பின் உங்களிடம் எதையும் பேசுவாள் என்று சொல்வதற்கில்லை.
எப்போதும் அவளிடம் தோழமை உணர்வுடன் பழகுங்கள். அடிக்கடு உங்கள் மூடு மாறாமல் இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். "அப்பா எப்போ அமைதியா இருப்பாரு, எப்போ எரிஞ்சு விழுவாருன்னு தெரியாது" எனும் நிலமை வந்தால் சிக்கல் தான். அவளுடைய படிப்பு, நட்பு, எல்லாவற்றிலும் உங்கள் அளவான ஈடுபாடு இருக்கட்டும். "அவளுக்கு இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை" என்று மட்டும் எப்போதும் நினைக்காதீர்கள். குறிப்பாக ஆண்களைப் பற்றியும், ஆண்களின் குணாதிசயங்கள், சிந்தனைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றைப் பற்றியும் அவளுக்குப் புரியும் வகையில் அவ்வப்போது சொல்வது அவசியம். வெளுத்ததெல்லாம் பாலல்ல, பாய்சன் கூட உண்டு என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும், அதான் விஷயம்.
இந்த அப்பா மகள் பந்தத்தில் யாருக்கு அதிக பொறுப்பு என நினைக்கிறீர்கள்? அப்பாவுக்கு என்று சொன்னால் நீங்கள் ஒரு பொறுப்பான அப்பா என்று அர்த்தம். டீன் ஏஜ் மகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு பொறுமையாக வழிகாட்ட வேண்டியது உங்கள் கடமை. ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். டீன் ஏஜ் பருவம் தொட்டால் வெடிக்கும் பருவம். அதனால் அவளை உசுப்பேற்றும் எந்த சண்டையையும் நடத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக அவளுடைய தோற்றம், அழகு, ஆடைகள் போன்றவற்றைக் கிண்டலடிக்காதீர்கள். மாறாக, பாராட்டுங்கள். பாராட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும். அவளை வலுவாக்கும்.
சமூகம் சார்ந்த பல அறிதல்களையும் நீங்கள் தான் அவளுக்குச் சொல்லித் தர வேண்டும். அவற்றைப் பற்றிய தெளிவை மகளுக்குத் தரும் பொறுப்பும் உங்களிடமே.
ஒரு ஆச்சரிய உண்மை என்னவென்றால், பதின் வயதுத் தொடக்கத்தில் இருக்கும் மனோபாவம் நாள் செல்லச் செல்லப் பக்குவப்படும். பெண்ணின் திருமண வயது வரும்போது "அப்பா தான் உலகம்" எனும் நிலைக்குப் பெண்கள் வந்து விடுவார்கள். அதுவரை சலிக்காத வழிகாட்டலும், பொறுமையான அணுகு முறையும், நிபந்தனையற்றை அன்பும் நீங்கள் காட்ட வேண்டியது அவசியம்.
சின்ன வயதிலிருந்தே தந்தையின் வழிகாட்டுதலிலும், அன்பிலும் வளரும் குழந்தைகள் நல்ல மன வளர்ச்சி அடையும் என்கிறார் எழுத்தாளரும் மருத்துவருமான மெக் மீக்கர். "ஸ்ட்ராங் ஃபாதர்ஸ், ஸ்ட்ராங் டாட்டர்ஸ்" எனும் நூலில் அப்பாவின் வழிகாட்டுதலே டீன் ஏஜ் பெண்களுக்கு மிக மிகத் தேவை என்கிறார். "என் பொண்ணோட வாழ்க்கையில் மிக முக்கியமான நபர் நான்" எனும் எண்ணம் அப்பாக்களுக்கு வரவேண்டியது தான் முதல் தேவை என்கிறார் இவர்.
இன்னொரு முக்கியமான விஷயம், நீங்கள் உங்கள் மகளை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வைத்து மட்டும் உங்கள் மகள் உங்களை எடை போடுவதில்லை. உங்கள் மனைவியை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள், மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதையெல்லாம் அவள் கூட்டிக் கழித்துப் பார்ப்பாள். நீங்கள் எல்லா இடத்திலும் வலுவாக இல்லையேல் நீங்கள் அவளிடம் காட்டும் அன்பை போலித்தனம் கலந்ததாக அவள் கருதிக் கொள்ள வாய்ப்பு உண்டு.
கடைசியாக ஒன்று. "என் அப்பாவைப் போல நல்ல ஒரு ஆண் எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள் மகள் நினைக்க வேண்டும். அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி பெற்று விட்டீர்கள் என்று பொருள்! வெற்றி பெற வாழ்த்துக்கள்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கினார் என்பது வரலாறு. அவர் தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் எதிர்காலத்தில் அவரை முதல் பெண் பிரதமராக மிளிர்வதற்கு துணை நின்றது என்றுகூட சொல்லலாம். சிறையில் இருந்தபோதுகூட தன் மகளான இந்திராவுக்கு கடிதம் எழுத நேரு தவறியதில்லை.
அன்புடன்...
ஷேக் முஹமது
--

TOPIC : HARUN YAHYA PAGE
Source : http://ping.fm/C73zu
S.No
Index
1 Creation of Man
2 Creation of Universe
3 Design in the Bone
4 Every Moment
5 Perished Nations Part-1
6 Perished Nations Part-2
7 Miracles of the Quran
8 Miracle of Ant *
9 Miracle of Dolphines *
10 Miracle of Honeybee *
11 Miracle of Solomon *
12 Miracle of Spider *
13 Miracle of Planets *
14 The Noble Path
15 Deep Thinking *
16 Dont be duped by evolution
17 The lotus in design
18 Creation of Camel *
19 The Truth of the Life of this World
* Indicates Runable Application
Source : http://ping.fm/C73zu
S.No
Index
1 Creation of Man
2 Creation of Universe
3 Design in the Bone
4 Every Moment
5 Perished Nations Part-1
6 Perished Nations Part-2
7 Miracles of the Quran
8 Miracle of Ant *
9 Miracle of Dolphines *
10 Miracle of Honeybee *
11 Miracle of Solomon *
12 Miracle of Spider *
13 Miracle of Planets *
14 The Noble Path
15 Deep Thinking *
16 Dont be duped by evolution
17 The lotus in design
18 Creation of Camel *
19 The Truth of the Life of this World
* Indicates Runable Application
ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், இந்த ஆட்சியைத் தூக்கி எறியலாம் என்கிற நம்பிக்கையை மக்களாட்சி முறை அளிப்பதால், மக்கள் மனதிற்குள் கொதித்தபடி விலைவாசி ஏற்றத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சும் விதமாக இப்போது சமையல் எரிவாயுவின் விலையையும், டீசல் மற்றும் மண்ணெண்ணெயின் விலையையும் உயர்த்தி ஒட்டுமொத்த நடுத்தர வர்க்க, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் பெட்ரோல் விலையை அதிகரித்த போதே, யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்கிற கதையாய் விரைவிலேயே பெட்ரோலியப் பொருள்களின் அடுத்த கட்ட உயர்வை எதிர்பார்த்தோம். அப்போதே நமது தலையங்கத்தில் இந்த விலைவாசி உயர்வு என்பது தனியார் பெட்ரோலிய நிறுவனங்களைக் காப்பாற்றுவதற்கும், அவர்கள் லாபம் சம்பாதித்துக் கொழிப்பதற்கும் மத்திய அரசால் நடத்தப்படும் நாடகம் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.
மே மாதம் பெட்ரோல் விலை உயர்வால் விற்பனை சற்றும் பாதிக்கப்படவில்லை என்கிற புள்ளிவிவரம் தந்த தைரியத்தில் இப்போது சமையல் எரிவாயு, டீசல், மண்ணெண்ணெய் விலையை உயர்த்தி இருக்கிறார்கள். இதனாலும் விற்பனை நிச்சயமாகக் குறையாது என்று நம்பலாம். ஆனால், இந்த உயர்வுகளால் ஏற்படும் அதிகப்படி செலவை ஈடுகட்ட மாதச் சம்பளம் பெறும் சராசரி நடுத்தரவர்க்கத்தினர் அனுபவிக்க இருக்கும் கஷ்டங்களைப் பற்றி ஏ.சி. அறைகளில் இருந்தபடி திட்டமிடும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன தெரியும்?
குறைந்த கட்டணத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்தை உறுதி செய்துவிட்டு, இவர்கள் பெட்ரோல் கட்டணத்தை பத்து மடங்கு அதிகரித்தாலும் யாரும் கவலைப்படப் போவதில்லை. ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டுமானாலும் பஸ் வசதியோ, மெட்ரோ ரயில் வசதியோ இருந்தால் சொந்த வாகனம் ஏன் தேவைப்படப் போகிறது? இன்றைய நிலைமை அப்படியா இருக்கிறது?
சொந்த வாகனம் இருப்பது என்பது ஒரு சமுதாய அந்தஸ்தாகி விட்டிருக்கிறது. பத்தாம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றதும் குழந்தைகளுக்குக் கைக்கடிகாரம் என்றிருந்தது போய் இப்போது இரு சக்கர வாகனம் என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இன்றைய நடுத்தர வருவாய்ப் பிரிவினர் குறைந்தபட்சம் ஒரு 50சிசி வாகனமாவது வைத்திருந்தால்தான் அலுவலகம் சென்று வரவோ, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று கூட்டி வரவோ முடிகிறது.
இந்த வாகனங்களை வாங்கி அதற்கு மாதா மாதம் தவணை அடைப்பது போதாதென்று, இப்போது அதிகப்படியான பெட்ரோல் செலவும் என்று மனதிற்குள் அழுது கொண்டிருந்த நிலையில் சமையல் எரிவாயு எண்ணெய் விலையையும் கூட்டி, டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய உபயோகப் பொருள்களின் விலையையும் அதிகரித்து மத்திய அரசு தனது மக்கள் விரோதப் போக்கை வெளிப்படுத்தி இருக்கிறது. இதற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால் பல விடை கிடைக்காத கேள்விகள் எழுகின்றன.
கச்சா எண்ணெய் விலை என்பது உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் ஒன்றாகத்தானே இருக்கும்? அப்படி இருக்கும்போது, அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.45க்கு விற்கப்படும்போது இந்தியாவில் மட்டும் ரூ.70க்கு விற்கப்படுவானேன்? அரபு நாடுகள் அமெரிக்காவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெயை விற்பனை செய்கின்றனவா? நமது நட்பு நாடுகள் என்று அரபு நாடுகளைக் கூறுகிறோமே, ஆனால், இந்த விஷயத்தில் நாம் வஞ்சிக்கப்படுகிறோமா?
அது போகட்டும், தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் உலகச் சந்தை நிலவரத்தில் அவர்களே கச்சா எண்ணெயை வாங்கி சுத்திகரித்து அவர்களுக்குக் கட்டுப்படும் விலைக்கு விற்றுக் கொள்ளட்டுமே, எதற்காக நமது அரசு அவர்களுக்காகக் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து கொடுக்க வேண்டும்? நமது எண்ணெய்க் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய்க்கு உலக மார்க்கெட் விலையைத்தானே நாம் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும்? ஏன், குறைந்த விலைக்குக் கொடுக்கிறோம்?
நாம் பெட்ரோலுக்கும், டீசலுக்கும், சமையல் எரிவாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும் தரும் விலையில் கணிசமான அளவு, ஏறத்தாழ 40%, சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி, "செஸ்' எனப்படும் சிறப்புக் கட்டணம் என்று பெறப்படுகிறது. இப்போது மத்திய அரசு தாங்கள் எங்களுக்குக் கிடைக்கும் சுங்க வரி மற்றும் கலால் வரியிலிருந்து சற்று குறைத்துக் கொள்கிறோம், மாநில அரசுகள் தங்களது விற்பனை வரியைக் குறைத்துக் கொள்ளட்டும் என்கிறது. நன்றாக இருக்கிறது இந்த நியாயம்!
பெட்ரோலிய நிறுவனங்கள் தாங்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்கிற மத்திய அரசின் முடிவே ஒரு மிகப்பெரிய மோசடி. கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தால் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயரும், குறைந்தால் விழும் என்கிற ஆசை காட்டி மக்களை ஏமாற்றி விட்டு, தனியார் பெட்ரோலிய நிறுவனங்கள் லாபம் அடைய மத்திய அரசு செய்யும் சதிதான் இந்த விலை நிர்ணய முறை. முதலில், இப்போதைய விலை நிர்ணய முறைக்கு முற்றப்புள்ளி வைக்க வேண்டும்.
நமது பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், திட்டக் கமிஷன் உறுப்பினர்களுக்கும் இப்போதெல்லாம் ஒரே ஒரு கவலைதான். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் இரண்டு இலக்கத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் அது. விலைவாசி உயர்வு 9.13% இருப்பதைப் பற்றியோ, அது மேலும் அதிகரிக்குமே என்றோ அவர்கள் கவலைப்படவில்லை. இவர்கள் என்ன பொருளாதாரம் படித்துத் தேர்ந்திருக்கிறார்களோ தெரியவில்லை.
பொருளாதார வளர்ச்சி உயர்வது கிடக்கட்டும். விலைவாசி குறைவதற்கு வழிகாணுங்கள். மக்கள் தெருவில் இறங்கிப் போராடத் தலைப்பட்டால், சட்டம் ஒழுங்குப் பிரச்னையை அரசு விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்படலாம்!

Thursday, June 30, 2011
Visit: www.mohamedbunder.tk
வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் எங்கு சென்றாலும் கூட்டம் எங்கு பார்த்தாலும் கூட்டம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்வதற்குள் நம்மை கசக்கி பிழிந்து விடுவார்கள். இந்தியாவில் பெரும்பாலானவர்கள் பயணம் செய்ய மற்ற வாகனங்களை விட ரயிலில் பயணம் செய்யவே அதிகம் விரும்புகின்றனர். கட்டணமும் குறைவு, குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லலாம் மற்றும் இரவு முழுவதும் எந்த வித பிரச்சினையுமின்றி தூங்கி கொண்டே செல்லலாம் என்ற பல காரணங்களால் மக்கள் அனைவரும் ரெயிலில் செல்வதை விரும்புகின்றனர்.
ரயில்வே டிக்கட்டுகளை 90 நாட்களுக்கு முன்பே பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி உள்ளதால் டிக்கட்டுகள் மளமளவென காலியாகி விடுகிறது. லைனில் காத்து கிடக்க தேவையில்லை வீட்டில் படுத்துக்கொண்டே டிக்கட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம். இது போன்ற வசதிகளாலே பெரும்பாலானவர்கள் இந்த ஆன்லைன் முறையை விரும்புகின்றனர். இப்படி ஆன்லைனில் ரயில் விவரங்களை கண்டறிய சிறந்த 5 தளங்களை கீழே கொடுத்துள்ளேன்.
IRCTC
ஆன்லைனில் ரயில் விவரங்களை கண்டறியவும் டிக்கட்டுகளை முபதிவு செய்யவும் உதவும் மிக சிறந்த தளமாகும். இந்த தலத்தில் நீங்கள் உறுப்பினராக வேண்டியது அவசியம். உறுப்பினரானால் தான் ரயில் விவரங்களை உங்களால் கண்டறிய முடியும். இணையத்தில் இந்த ஒரு தலத்தில் மட்டும் தான் டிக்கட்டுக்களை முன்பதிவு செய்ய முடியும். காலை 8 TO 10 தட்கல் டிக்கட் வழங்கும் நேரம் என்பதால் அந்த சமயத்தில் இந்த தலத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்வது மிக சிரமம். மற்ற சமயங்களில் நன்றாக இயங்கும்.
INDIAN RAILWAY
இந்த தளத்தில் நீங்கள் தகவல்களை பெற உறுப்பினர் ஆகவேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த ரயிலை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். PNR நிலைப்பாட்டையும் இந்த தளம் மூலம் அறியலாம். இந்த தளத்தில் டிக்கட்டுக்களை முன்பதிவு செய்ய முடியாது
E-RAIL
இந்த தளத்திலும் நீங்கள் உறுப்பினர் ஆகாமலே அனைத்து தகவல்களையும் பெற முடியும். மற்றும் இந்த தளத்தில் கூடுதல் வசதியாக அந்த ஏரியாக்களின் டிராவல்ஸ் கம்பெனிகளின் முகவரியோடு தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளது.
INDIAN RAIL INFO
இந்த தளத்திலும் நீங்கள் உறுப்பினர் ஆகாமலே அனைத்து தகவல்களையும் பெற முடியும்.
TRAIN ENQUIRY
ரயில் நேரங்களை அறிய இந்த தளமும் மிக பிரபலமான தளம். ரயில் எண் அல்லது ரயிலின் பெயரை கொடுத்தாலே போதும் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்த தளத்தில் PNR விவரங்களை அறிய முடியாது.

Subscribe to:
Posts (Atom)